Kothamalli Sadam: உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் கொத்தமல்லி சாதம்.. சுவைபட செய்வது எப்படி?..!
உச்சி முதல் பாதம் வரை உடல் பாகங்களை ஒவ்வொரு அங்கமாக பாதுகாக்கும் கொத்தமல்லித் தழைகளில் சுவையான சாதம் செய்வது எப்படி என இன்று தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
ஆகஸ்ட் 10, சென்னை (Chennai News): இந்திய சமையல் அறைகளில் மிகமுக்கியமான இடத்தை பெற்றுள்ள கொத்தமல்லித் தழைகள் (Kothamalli), தன்னகத்தே பல நன்மைகளை கொண்டவை ஆகும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து, மாங்கனீசு, கால்சியம், பாஸ்பிரஸ் ஆகியவை உடலுக்கு பல்வேறு பயன்களை தரவல்லவை. இரத்தத்தை சுத்திகரிக்க, சருமத்தை பாதுகாக்க, கண்பார்வை குறைபாடை சரிசெய்ய, வாய்ப்புண், வயிற்றுப்புண், வயிற்றுவலி சரியாக, உடம்பு வலி, மலச்சிக்கல் சரியாக, கொழுப்பு குறைய, கால்சியம் சத்து கிடைக்க, குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என உடலின் உச்சியில் தொடங்கி பாதம் வரை கொத்தமல்லி நன்மைகளை செய்கிறது. அந்த வகையில், இன்று சுவையான கொத்தமல்லி தழை சாதம் (Coriander Rice) செய்வது எப்படி என காணலாம். Mochai Payaru Benefits: மொச்சை பயறில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
தேவையான பொருட்கள்:
அரைக்க:
மல்லித்தழைகள் - 2 கை அளவு,
இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 4,
பூண்டு - 6,
தாளிக்க:
கடுகு, உளுந்து - சிறிதளவு,
கடலை பருப்பு - 3 கரண்டி,
வரமிளகாய் - 4,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு - சிறிதளவு,
செய்முறை: Vegetarian Omelette Recipe: முட்டை இல்லா சுவையான சைவ ஆம்லெட்.. செய்வது எப்படி?!
- முதலில் எடுத்துக்கொண்ட இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, கடலைப்பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். வரமிளகாய், கடலைப்பருப்பு நிறம் மாறியதும் சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
- அப்போதே உடனடியாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லித்தழை பேஸ்டை வானெலியில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறி விட வேண்டும். பச்சை வாசம் போனதும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, வடித்து வைத்துள்ள சாதத்தை கிளறினால் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.