ஆகஸ்ட் 09, சென்னை (Kitchen Tips): அசைவப் பிரியர்களுக்கு புரோட்டீன் சத்து கிடைப்பது எளிது. அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட்டு வந்தாலே புரோட்டீன் பற்றாக்குறையை தீர்த்துவிடலாம். ஆனால் சைவப்பிரியர்களுக்கு புரோட்டீன் கிடைப்பது கொஞ்சம் கடினம். இனி அந்த கவலை வேண்டாம், புரோட்டீன் நிறைந்த இந்த சைவ ஆம்லெட்டை (Vegetarian Omelette) இனி அடிக்கடி போட்டு சாப்பிடுங்க…
தேவையான பொருட்கள்:
கீரை -1/2 கட்டு
சின்ன வெங்காயம்-15, (அ) ஒரு பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு
கடலை மாவு – 5 -7 மேசைக்கரண்டி
பால் - 2 தேக்கரண்டி
மிளகாய்ப்போடி-1/4 தேக்கரண்டி Mor Kulambu Idly Recipe: வீட்டுல புளிச்ச தயிர் நிறைய இருக்கா? இந்த மாதிரி மோர் குழம்பு இட்லி செய்யுங்க.. சூப்பராக இருக்கும்..!
செய்முறை:
பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, பால், மஞ்சள்தூள், மிளகாய்ப்பொடி, சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். நறுக்கிய சின்ன வெங்காயம் நறுக்கிய கீரை. பச்சை மிளகாய், எல்லாவற்றையும் கரைத்த மாவில் சேர்த்துக்கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து சிறிய ஆம்லேட்டாக ஒரு கரண்டி அளவு மாவெடுத்து வட்டமாக ஊத்தி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சுற்றிலும் விடவும். தேவைப்பட்டால் சிறிது துருவிய சீசை தூவவும். திருப்பி மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும், இப்பொழுது சைவ ஆம்லேட் தயார் சூடாக பரிமாறி மகிழவும்.