Mushroom Pepper Fry: சுட்டிக்குழந்தைகளுக்கு பிடித்த வகையில், சுவையான காளான் மிளகு மசாலா செய்வது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!
இன்று அதில் சுவையான பெப்பர் மசாலா செய்வது எப்படி என எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
செப்டம்பர் 11, சென்னை (Cooking Tips): உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் உணவுகளில், காளானுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. ஒருசிலருக்கு இயற்கையாகவே காளான் ஒற்றுக்கொள்ளாது எனினும், பிரச்சனை இல்லாதவர்கள் காளானை சாப்பிட்டு உடல் நலனை மேம்படுத்தலாம். காளானில் இருக்கும் செலினியம் சத்து, உடலின் எலும்புகளை உறுதிப்படுத்தும். பற்கள், தலைமுடி, ஆண்களின் உயிரணு வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்யும்.
மார்பக புற்றுநோய் குணமாக காளான்:
இரும்புசத்து, செம்புச் சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உடலுக்கு வாரி வழங்கப்படும். இதனால் நரம்புகள், ரத்த நாளங்கள் உறுதியாகும். உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்போர் காளானை எடுத்துக்கொள்ளலாம். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வைட்டமின் சத்து கிடைக்க, மார்பக புற்றுநோய் குணமாக, கொழுப்புகள் குறைய, நீரழிவு நோய் கட்டுப்பட, இரத்த சோகை சரியாக கட்டாயம் காளான் நல்லது. ஒவ்வாமை இருப்போர் காளானை தவிர்க்கலாம்.
காளான் மிளகு மசாலா:
இன்று சுவையான காளான் மிளகு மசாலா (Kalan Pepper Masala) செய்வது எப்படி என காணலாம். இதனை சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு சேர்த்து சாப்பிடலாம். சூடான சாதத்திலும் கிளறி காளான் சாதமாக சாப்பிடலாம். சுட்டிக்குழந்தைகளுக்கும் வித்தியாசமான முறையில் இதனை செய்துகொடுத்தால், அவர்கள் மகிழ்ந்து மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள், உடல் நலனும் மேம்படும்.
தேவையான பொருட்கள்:
- காளான் - 300 கிராம்,
- எண்ணெய் - 4 கரண்டி,
- சோம்பு தூள் - 2 கரண்டி,
- வெங்காயம் - 4 (நறுக்கியது),
- குடமிளகாய் - 1 கப் அளவு அல்லது பச்சை மிளகாய் - 4,
- பூண்டு பற்கள் - 10,
- இஞ்சி - இன்ச் அளவு,
- பட்டை - 2,
- கிராம்பு - 3,
- பிரியாணி இலை - 1,
- உப்பு - தேவையான அளவு,
- மிளகுத்தூள் - 2 கரண்டி,
- மல்லித்தழைகள் - கைப்பிடியளவு.
- மிளகாய் செதில் எனப்படும் சில்லி ப்ளெக்ஸ் - 1/4 கரண்டி (உங்களுக்கு விருப்பம் இருப்பின்).
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட எண்ணெயை வானெலியில் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு தூள், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி தாளிக்க வேண்டும்.
- பின் இதனுடன் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை முதலில் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். இவை கால்பாதம் வேகத் தொடங்கியதும், காளான், மிளகுத்தூள், மிளகாய் செதில், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். எண்ணெய் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
- காளான் வதங்கியதும் கொத்தமல்லித்தழைகளை தூவி இறக்கினால், சுவையான காளான் பெப்பர் மசாலா (Mushroom Pepper Masala Fry) தயார்.