Lemon Cake Recipe: வீட்டிலேயே சுவையாக லெமன் கேக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
வீட்டிலேயே சுலபமாக லெமன் கேக் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
செப்டம்பர் 27, சென்னை (Kitchen Tips): குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவர். அந்தவகையில், வித்தியாசமான முறையில் லெமன் கேக் (Lemon Cake) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - 1 கப்
ஆரஞ்சு அல்லது லெமன் கலர் - 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் - 5
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி Mahalaya Amavasya 2024: மகாளய அமாவாசை 2024 வழிபாட்டு முறைகள் என்னென்ன? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் என்ன?!
செய்முறை:
⦁ முதலில் மைதா மாவில் சிறிது நெய் கலந்து, பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்க வேண்டும்.
⦁ அதில், பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். பின்னர், எலுமிச்சம் பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
⦁ ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய எலுமிச்சம் பழத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
⦁ அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடானதும் சர்க்கரையைக் கொட்டி கம்பிப்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.
⦁ பின்பு, அதில் மைதா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறிவிட்டு, கலவை நன்றாக நுரைத்து வரும் போது, எலுமிச்சை விழுதை அதில் போட்டு நன்றாகக் கிளறவும். பிறகு நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்ற வேண்டும்.
⦁ இப்போது, அந்தக் கலவையில் லெமன் அல்லது ஆரஞ்சு கலர் சில துளிகள், வெனிலா எசன்ஸ் சில துளிகள், ஏலக்காய்த் தூள், பொடிப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு, திராட்சை இவையனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
⦁ கலவை பர்பி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியவுடன் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான லெமன் கேக் ரெடி.