IPL Auction 2025 Live

Pear Lassi Recipe: லஸ்ஸி பிரியர்களுக்காக.. பேரிக்காய் லஸ்ஸி செய்வது எப்படி?.!

உங்கள் குழந்தைகள் ஏதாவது குளு குளுனு குடிக்க கேட்டா இத செஞ்சு கொடுங்கள்.

Pear Lassi (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 08, சென்னை (Kitchen Tips): கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள பேரிக்காய் லஸ்ஸி (Pear Lassi) செய்து பாருங்கள். இது உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகின்றது. இதனை சாப்பிடுவதால், பற்களும், இதயமும் வலுப் பெறுகின்றது.

தேவையான பொருட்கள்:

பேரிக்காய் - 2

புளிப்பில்லாத தயிர் - 1 டம்ளர்

சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

ஐஸ் வாட்டர் - 1 டம்ளர் Bomb Experts Raid In Sankarankoil Taluk Office: தேர்தல் எதிரொலி... சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!

செய்முறை: தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பேரிக்காயை சுத்தம் செய்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கித் தட்டில் போட்டுக் கொள்ளவும். பெரிய மிக்ஸி ஜாரில், நறுக்கின பேரிக்காய், சர்க்கரையை சேர்க்கவும். பிறகு ஐஸ்வாட்டர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து தயிரை சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்ததை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். பின் அதனை டம்ளர்களுக்கு மாற்றவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான, பேரிக்காய் லஸ்ஸி தயார். இதனை செய்து பார்த்து அசத்தி, சம்மரை என்ஜாய் செய்யவும்.