Cancer in India: புற்றுநோய்க்கு காரணமாகும் பழக்கங்கள்; இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு.!

புகையிலை பழக்கம் அதிகரிப்பால் இந்தியாவில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயின் எண்ணிக்கையானது கூடுதலாகி இருக்கிறது.

Cancer File Pic (Photo Credit : Pixabay)

ஆகஸ்ட் 01, சென்னை (Health Tips): இந்தியாவை பொறுத்தமட்டில் தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோய் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்த தகவல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. டெல்லியை சேர்ந்த கேன்சர் (Cancer) முக்த் பாரத் அறக்கட்டளை சார்பில் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன. Amla Juice Recipe: ஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் அரை நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? விபரம் உள்ளே! 

புற்றுநோய் அதிகரிப்பு:

இந்த ஆய்வு முடிவுகளின்படி, 1869 பேரில் 26% நபர்கள் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 01ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் தொகுக்கப்பட்ட தகவல்களில் தலை & கழுத்து பகுதியில் புற்றுநோய் அதிகரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. Mullangi Bonda Recipe: சுவையான முறையில் முள்ளங்கி போண்டா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..! 

புற்றுநோய்க்கு அடித்தளமிடும் தீய பழக்கங்கள்:

இந்தியாவை பொறுத்தமட்டில் அதிக அளவிலான புகையிலை (Tobacco) நுகர்வு மற்றும் பாபிலோமா வைரஸ் (HPV) காரணமாக தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோய் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. 80 - 90% நோயாளிகள் புகையிலை மெல்லும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவ்வாறான பழக்கங்கள் புற்றுநோய்க்கு அடித்தளமிடுகின்றன.