Date Palm Benefits: ஈச்சம் பழத்தின் நன்மைகள்.. அட இந்த சின்ன பழத்துல இவ்வளவு இருக்கா?!
பல்வேறு சத்துகள் நிறைந்துள்ள ஈச்சம் பழத்தின் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
ஜூலை 08, சென்னை (Health Tips): ஈச்ச மரம் கிராம மற்றும் வறட்சியான பகுதிகளிகளில் பரவலாக காணப்படும். மரத்தின் வளர்ச்சியை பொருத்து இது மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இம்மரத்திலிருந்து கூடை, பாய், பஞ்சு போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பனை மர வகையைச் சேர்ந்த இந்த ஈச்ச மரத்தில் விளையும் பழத்தில் பேரீச்சம் பழத்திற்கு (Date Palm) இணையான சத்துக்கள் இருக்கின்றன. ஈச்சம் மரத்திலிருந்து கள்ளும் கிடைக்கிறது. இது தென்கிழக்காசிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஈச்சம் பழத்தின் நன்மைகள்:
- உணவு எடுத்துக் கொள்வதற்கு முன் தினமும் சில ஈச்சம் பழத்தை எடுத்துக் கொண்டால் செரிமானபின்மை, மலச்சிக்கல் போன்ற ஜீரணமண்டலத்தில் ஏற்படும் பிரச்சனையை விரைவில் குணமடைய வைக்கிறது.
- இதில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் தேய்மானத்தை குறைத்து உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. BSNL Launches 4G Services: தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்..!
- ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் கண் பார்வை குறைபாடு, பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் நோய் போன்றவை ஏற்படும் இதை தடுக்க ஈச்சம் பழம் மிக உதவியாக இருக்கிறது. தினமும் ஈச்சம் பழம் சாப்பிடுவதால் கண் பார்வைத்திறன் அதிகரிக்கிறது. கண்புரை வராமலும் பாதுகாக்கிறது.
- ஈச்சம் பழத்தில் இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு உடலின் பலத்தை அதிகரிக்கிறது. இரும்புக் குறைபாடு உள்ளவர்கள் இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- நரம்புதளர்ச்சி, மலட்டுத்தன்மை, ஆண்மை குறைபாடுகள், நரம்பு சார்ந்த பிரச்சனைகளை போன்றவைகளை சரி செய்கிறது.
- எடை குறைவாக இருப்பவர்கள், ஈச்சம் பழத்தை அரைத்து சூடான பாலில் கலந்து தினமும் குடித்து வர எடை அதிகரித்து பலத்தை அளிக்கிறது.
- மது, புகை, புகையிலை போன்ற போதைக்கு பழக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட ஈச்சம் பழம் சாப்பிட்டு வர நாள்பட இந்த பழக்கத்திலிருந்து விடுபடலாம்.
- ஈச்சம் பழம், புற்றுநோய், நீரிழிவு நோய்களுக்கு எதிராக செயல்படும்.