Health Tips: குடல்புண், மார்பக புற்றுநோய், ஆண்மைக்குறைவுக்கு அற்புத தீர்வு; சேப்பக்கிழங்கின் அசத்தல் நன்மைகள்.!

நரம்புத்தளர்ச்சி, அனீமியா, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் சேப்ப கிழங்கு கட்டாயம் நாம் சாப்பிட வேண்டியது ஆகும்.

Seppankizhangu (Photo Credit: @tuticorian / @udalaiventhan X)

ஆகஸ்ட் 30, சென்னை (Chennai): சீசன் காலங்களில் மட்டும் அதிகளவு கிடைக்கும் சேப்பங்கிழங்கு (Seppankizhangu), சத்துக்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றாகும். இதில் உள்ள பீட்டா கரோட்டின், ஆண்டி-ஆக்சிடன்ட் சேப்பக்கிழங்கின் (Taro Root) இலையில் இருக்கிறது. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்லது ஆகும். வைட்டமின் ஏ, இ, பாஸ்பிரஸ், கால்சியம், நார்சத்துக்களும் இதில் நிறைந்து கிடக்கின்றன.

ஆண்மைக்குறைவு தீர்வு:

கண்கள், பற்கள், எலும்புகள் ஆகியவற்றை பாதுகாப்பதுடன், அதன் உறுதி மற்றும் ஆரோக்கியத்தையும் சேப்பக்கிழங்கு அதிகரிக்கும். நார்சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு செரிமான கோளாறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து, குடல் புண்களை சரியாக்கும். ஆண்மைக்குறைவு சார்ந்த பிரச்சனைகளை நீக்கும் முருங்கை கீரைக்கு இணையான சக்தியை சேப்பங்கிழங்கு கொண்டுள்ளது என்பதால், ஆண்கள் எடுத்துக்கொள்ளலாம். How to Block an ATM Card: உங்கள் ஏடிஎம் கார்டு காணாம போச்சா? அப்போ உடனே பிளாக் பண்ணுங்க..! 

மார்பக புற்றுநோயை சரியாக்கும்:

சேப்பங்கிழங்கை போல, அதன் இலைகளும் தன்னகத்தே பல நன்மைகளை கொண்டவை ஆகும். சேப்பக்கிழங்கின் இலையில் இருக்கும் வைட்டமின் பி, நரம்புத்தளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வைட்டமின் சி, ஆண்டி-ஆக்சிடென்ட் புற்றுநோய் செல்களை அழிக்கும். குடல் புற்றுநோயை குணப்படுத்தும். பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோயை தீர்க்க உதவி செய்யும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

புரதம், இரும்புசத்து, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் போன்றவை வலி நிவாரணியாகவும் செயல்படும். உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு சேப்பங்கிழங்கு இலை வரப்பிரசாதம் ஆகும். அனீமியா பிரச்சனை இருப்போர் சேப்பங்கிழங்கு இலைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கட்டுப்படும். Chettinad Aviyal Recipe: சத்தான காய்கறிகளை கொண்டு செட்டிநாடு அவியல் செய்வது எப்படி..? 

மருத்துவரை கலந்தாலோசியுங்கள்:

அதீத நன்மை கொண்ட சேப்பங்கிழங்கு இலை சிலருக்கு தோல் அலர்ஜி, சிறுநீரக கற்கள் சார்ந்த பிரச்சனையை உண்டாக்கும். ஆகையால், அதனை நன்கு வேகவைத்து உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை எடுத்துக்கொள்ளலாம். சந்தேகம் இருப்போர் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது.