Hair Serum: முடி கொட்டுதா.. அப்போ இந்த ஹேர் சீரத்தை செய்துப் பாருங்கள்..!
முடி கொட்டுவதை தடுத்து அடர்த்தியான முடி வளர வீட்டிலேயே இந்த ஹேர் சீரத்தை செய்துப் பாருங்கள்.
டிசம்பர் 21, சென்னை (Chennai): ஆண், பெண் இருவருக்குமே பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வது தான். மன அழுத்தம், ஊட்டச்சத்து இன்மை, ஹார்மோன் சமநிலையின்மை இப்படி முடி உதிர்வை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. இதனைத் தடுக்க நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்காக வீட்டிலேயே நாம் ஹேர் சீரத்தைத் (Hair Serum) தயாரித்து பயன்படுத்தி வரலாம்.
ஹேர் சீரம் தயார் செய்யும் முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும். பின்னர், அந்த தண்ணீரில் 1 டீஸ்பூன் டீ தூள், 1 ஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடியளவு மருதாணி இலை, 2 பெரிய வெங்காயத்தின் தோல் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இப்போது ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் அளவு சுண்டி வரும் வரை கொதிக்க விடவும். பின்னர், அதை வடிக்கட்டி நன்றாக ஆற வைத்து,, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். Tata Punch EV: டாடா நிறுவனத்தின் புதிய அசத்தலான கார்... எப்போது அறிமுகம்?.!
இதனை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து மென்மையாக மசாஜ் செய்து சுமார் 30 நிமிடம் கழித்து, நீங்கள் எப்பவும் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி முடியை அலசிவிடுங்கள். இப்படி வாரத்தில் மூன்று முறை செய்தால், உங்கள் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளர தொடங்கிவிடும். தொடர்ந்து ஒரு மாதம் செய்து பாருங்கள். அப்போதுதான் ரிசல்ட் தெரியும்.