டிசம்பர் 21, டெல்லி (Delhi): டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்காக தனி பிராண்டை டாடா.இவி என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. இந்த பிராண்டில் தான் இனி டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. X- Twitter Down: சர்வதேச அளவில் முடங்கியது எக்ஸ் (ட்விட்டர்): பயனர்கள் அவதி.!
டாடா பஞ்ச் இவி கார்: இந்நிலையில் இந்த பிராண்டின் கீழ் டாடா பஞ்ச் இவி கார் (Tata Punch EV), வரும் ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது இந்த காருக்கான புக்கிங் துவங்கப்படும் எனவும் டெலிவரி மார்ச் மாதத்திற்கு முன்பே துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டியாகோ இவி என்ற கார் குறைவான விலையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. அதற்கு அடுத்த கொஞ்சம் கூடுதல் விலையில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் 9 லட்சம் என்ற விலையில் இந்த கார் அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.