நவம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகரும் ஃபெங்கால் புயல் (Fengal Puyal) காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புயலின் (Fengal Cyclone) தாக்கத்தால் தமிழகத்தில் மழை தொடரும், இன்று இரவு 07:00 மணிவரையில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. Mamallapuram Accident: மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கரம்.. 4 பெண்கள் பரிதாப பலி.!
இரவு 07:00 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 27, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)