நவம்பர் 27, சென்னை (Cinema News): கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை (Viduthalai). இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி காவல் அதிகாரியாக நடிக்க இவருக்கு எதிரான கதப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் மெகா ஹிட்டானது இந்த திரைப்படம்.
விடுதலை 2: விடுதலை ரிலீஸுக்கு முன்பே இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல், இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் மொத்தமாகவே முடித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார். அதோடு விடுதலை 2-வில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விடுதலை 2 அடுத்த மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. Mohini Dey On A R Rahman: "ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி" வதந்திகள் குறித்து மோகினி டே வெளியிட்ட வீடியோ..!
விடுதலை 2 டிரெய்லர்: இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லரில் ”என்ன மாதிரி படிக்காத ஒருவன் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததால் தான், உன்ன மாதிரி ஒருவன் படித்து விட்டு வந்து இங்கே உட்கார்ந்து இருக்கிறாய்” என நடிகர் இளவரசன் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. ரயில்வே டிராக்கில் படுத்து போராடியவர் என்ற வசனத்தால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை தான் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார் என கூற முடிகிறது. ஏனெனில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லக்குடியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தின் போது, கருணாநிதி தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து போராடியது வரலாறு.
அதே நேரத்தில் ட்ரெய்லரின் முடிவில், “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது” என்ற மற்றொரு வசனமும் இடம்பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய், அண்மையில் பிரமாண்டமாக தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். அதில் விஜய்யின் கொள்கைகள் தெளிவாக இல்லை, குழப்பமான நிலைப்பாட்டில் உள்ளது என பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். எனவே இந்த வசனம் விஜயை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
விடுதலை 2 டிரெய்லர்: