Pudina Pongal (Photo Credit: Instagram)

நவம்பர் 27, சென்னை (Kitchen Tips): பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை தான் செய்து சாப்பிடுவோம். எப்போதும் போல வெண்பொங்கலை ஒரே மாதிரி செய்யாமல் சற்று வித்தியாசமாக புதினா சேர்த்து சுவையாக செய்யலாம். இதனை செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருக்கும். அந்தவகையில், ருசியான புதினா வெண்பொங்கலை (Pudina Pongal) வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். Egg Pakoda Recipe: முட்டை வச்சு மொறுமொறுப்பான பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 கப்

பாசிப்பருப்பு - அரை கப்

தண்ணீர் - 5 கப்

நெய் - தேவையான அளவு

முந்திரி - 10

புதினா - 1 கைப்பிடி

பச்சைமிளகாய் - 1

இஞ்சி - 1 துண்டு

சீரகம் -1 தேக்கரண்டி

மிளகு -1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் குக்கரில் 1 கப் பச்சரிக்கு அரை கப் பாசிப்பருப்பை சேர்த்து சூடாகும் வரை வறுத்துவிட்டு, இதை கழுவி எடுத்துக்கொள்ளவும். இப்போது, இதை குக்கரில் சேர்த்து அத்துடன் 5 கப் தண்ணீர், 2 தேக்கரண்டி நெய் சேர்த்து 4 விசில் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு கைப்பிடி புதினா, பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொண்டு, அடுப்பில் கடாயை வைத்து 5 தேக்கரண்டி நெய், உடைத்த முந்திரி 10, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி சேர்த்து புதினா பேஸ்டை சேர்த்து நன்றாக தண்ணீர் சுண்டும் வரை வதக்கிக்கொள்ளவும்.
  • அரிசி,பருப்பை நன்றாக குழைய வேக வைத்ததுடன் உப்பு தேவையான அளவு சேர்த்து, செய்த புதினா பேஸ்ட்டை சேர்த்து கிளறிவிட்டு 1 தேக்கரண்டி நெய்விட்டு கிண்டி இறக்கினால், சுவையான புதினா வெண்பொங்கல் ரெடி.