நவம்பர் 27, தாம்பரம் (Chennai News): தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தொடர்ந்து மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும், விரைவில் இது தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி ஃபெங்கால் புயலாக (Fengal Puyal) மாறும். Fengal Cyclone: ஃபெங்கால் புயல் எதிரொலி; கடலூர், நாகை உட்பட 9 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
புயல் நகர்வுகளை உடனுக்குடன் விண்டி-யில் தெரிந்துகொள்ளுங்கள்:
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாகபட்டினம், கடலூர் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின் நகர்வுகளை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கவனித்து, தனது அறிவிப்புகள் வாயிலாக மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. எனினும், புயலின் நகர்வுகள் தொடர்பான விபரத்தை நீங்கள் Windy.com எனப்படும் பக்கத்தில் இருந்தும் நேரடியாக கண்காணிக்கலாம். இதன் வாயிலாக புயலின் நகர்வுகள், அதன் திசை, மழைக்கு வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே நீங்கள் அறிந்து, அதற்கேற்ப செயல்படலாம். அதன் இணைப்பும் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
புயலின் நகர்வுகளை துல்லியமாக Windy.com ல் காணுங்கள்..