Tinnitus Problem: உங்களுக்கு எந்த நேரமும் காதில் எதோ சத்தம் கேட்குதா?.. அச்சச்சோ இந்த நோய் பாதிப்பாக இருக்கலாம்.. கவனமாக இருங்கள்.!
அவரால் எவ்வேலையும் செய்ய இயலாத அளவு மனஉளைச்சல் ஏற்படும்.
டிசம்பர், 8: ஒருவருடைய காதுகளில் எப்போதும் இடைவிடாது (Ear Observe Sound) ஒலியானது கேட்டுக்கொண்டு இருந்தால், அது பல துயரங்களை ஏற்படுத்தும். அவரால் எவ்வேலையும் செய்ய இயலாத அளவு மனஉளைச்சல் ஏற்படும். இது ஒருவகை நோய் ஆகும். இதற்கு பெயர் டின்னிட்ஸ் (Tinnitus). காதுகளை இடைவிடாது கேட்கும் சத்தம், சலசலப்பு, விசில் போன்ற சத்தங்கள் டின்னிட்ஸ் பாதிப்பு உள்ளவருக்கு ஒரு காதிலோ அல்லது இரண்டு காதிலுமே கேட்கும். இது எதனால் ஏற்படுகிறது? அதற்கான சிகிச்சை என்ன? என்பது குறித்து இன்று காணலாம்.
ஒலிஉணர்திறன் பாதிப்பு: இவ்வகை பாதிப்பு பல காரணத்தால் ஏற்படும். உரத்த சத்தம் நீண்ட நேரத்திற்கு கேட்பது இதுவே முதற் காரணமாகும். காக்லியா என்று அழைக்கப்படும் காதில் இருக்கும் சூழல் வடிவ உறுப்பின் ஒலிஉணர்திறன் செல்களுக்கு நிரந்தர சேதத்தினை கொடுப்பதால் இவ்வகை சத்தம் கேட்கும். இவ்வகையான பாதிப்பு உள்ள 90 % நபர்களுக்கு கேட்கும் திறன் இழப்பும் ஏற்படுகிறது.
யாருக்கு அதிகம் ஏற்படலாம்?: இசைக்கலைஞர்கள், தச்சர்கள், விமானிகள், மர ஆலைகளில் பணியாற்றி வருபவர்கள், துப்பாக்கி பொருட்களுடன் பணியாற்றுபவர்களுக்கு டின்னிட்ஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. வயது முதிர்ந்தவர்களுக்கு காது கேளாமை பிரச்சனை இருந்தால் அதன் அறிகுறி டின்னிட்ஸ் எனவும் கருதலாம். சைனஸ் தொற்று, பெண்களின் ஹார்மோன் மாற்றம், மெனியர்ஸ் நோய், கழுத்தில் ஏற்படும் காயம், தைராய்டு கோளாறு, மூளைக்கட்டி போன்ற பல காரணத்தால் டின்னிட்ஸ் ஏற்படலாம். Time Traveler Predicts: 2023ல் வரலாறாகப்போகும் 750 அடி மெகா சுனாமி.. Time Traveler கூறிய அதிர்ச்சி உண்மை.. ஏலியன்களும் வருகிறது.!
மருத்துவரை நாடுவதே நல்லது: இந்த பிரச்சனைக்கு மருத்துவரை நேரில் சந்திப்பதே சிறந்த மருத்துவமாக இருக்கும். அவர் காதில் இருக்கும் பாதையினை மெழுகு அடைத்துள்ளதா? என முதலில் சோதிப்பார். நோயின் தீவிரத்தை பொறுத்து அவர் கொடுக்கும் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும். காக்ளியர் இம்பிளான்ட் முறை கடுமையான காது கேளாமை பிரச்சனை இருந்தால் பரிந்துரை செய்யப்படுகிறது.
மனம்விட்டு மனதை நோகடிக்காதோரிடம் பேசுங்கள்: தனக்கு டின்னிட்ஸ் பிரச்சனை உள்ளதை தெரிந்துகொண்டவர் சிக்கலை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும். அவர் தனக்கு ஏற்படும் மன அழுத்தங்களை குறைக்க நண்பரிடமோ அல்லது தன்னுடன் நன்றாக பழகும் உறவினரிடமோ மனம் விட்டு பேசலாம். அதனைப்போல, காதுகளில் ஒலித்தடுப்பான் அமைப்பை பொருத்தி பலன் பெறலாம்.