Badam Benefits: உடலுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடிய பாதாமில் உள்ள நன்மைகள்..!
புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்த பாதாமில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதனை இந்த பதிவில் காண்போம்.
மே 31, சென்னை (Health Tips): பாதாமில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒரு சில பாதாம் (Almond) தினசரி புரதத் தேவையில் 8-யில் ஒரு பங்கை வழங்குகின்றது. இதனை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். மேலும், இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் சேர்த்தும் சாப்பிட முடியும். பாதாமில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது: தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் வைட்டமின் ஈ அளவை அதிகரிக்கும். இது இதய நோயைத் தடுக்க உதவுகின்றது.
சரும பராமரிப்பு: பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளது. இவை சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயதான பிற அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், செரிமானம் மேம்படும் மற்றும் கொலஸ்ட்ரால் குறையும். Minor Girl Rape: 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 19 வயது வாலிபர் போக்சோவில் கைது..!
உடல் எடையைக் குறைக்கும்: பாதாமில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. இதனால், உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
தெளிவான கண் பார்வை: இவற்றை சாப்பிடுவதன் மூலம் கண்புரை, மாகுலர் டிஜெனரேஷன் (Macular Degeneration) போன்ற கண்பார்வை பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். பாதாம் சாறு, இந்த நோய்களின் வளர்ச்சியை மெதுவாக்கும் என்று ஒரு ஆய்வில் கூறப்படுகிறது.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: இதில் இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் மூளை ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.