நவம்பர் 26, சென்னை (Kitchen Tips): வீட்டுல இருக்குற மற்ற அறைகளை விட அதிக கவனமாக இருக்க வேண்டிய இடம் சமையல் அறை தான். நாம் சமைக்கும் போது சில விஷயங்களை அதிகமாக செய்து விடுவோம், சில விஷயங்களை செய்யாமலேயே விட்டு விடுவோம். இதனால், ருசி தான் குறையும். அப்படி ருசி குறையாமலும், ஆரோக்கியமாகவும் இருக்க எதை செய்யக் கூடாது. Mushroom Cultivation: ரூ.1000 இருந்தாலே போதும்.. காளான் வளர்ப்பு தொழில் தொடங்கலாம் வாங்க.. விபரம் உள்ளே..!
சமையலில் செய்ய கூடாதவைகள்:
- கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
- காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.
- சூடாக இருக்கும்போது எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.
- பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
- பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
- ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது.
- காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
- மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
- தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
- குலாப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
- குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்துமல்லி இலையைப் போடக் கூடாது.