Benefits Of Dates: பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Dates (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 13, சென்னை (Health Tips): பேரீச்சம்பழம் அடிக்கடி ஒன்றிரண்டு சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு (Physical Fatigue) நீங்கும். பேரீச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன. இவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு ஆற்றலை அதிகரிக்கச்செய்கிறது. Killed Wife And Children With Axe: பாகிஸ்தானில் கொடூரம்; மனைவி, 7 குழந்தைகள் கோடாரியால் வெட்டிக்கொலை..!

பேரீச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்து நிரம்பி உள்ளது. இதனால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதன்காரணமாக, திடீரென ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகள் குறைகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம், இதய சம்மந்தமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. உடல் எடையை அதிகரிக்க பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள கலோரிகள், உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. மேலும், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரித்து, மூளை சிறப்பாக செயல்பட வழிவகை செய்கிறது.

பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால், நோய்களை தடுத்து, உடல் அமைப்பை மேம்படுத்துகிறது. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகை போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், உடலில் இரும்புச்சத்து குறைபாடு நோய்கள் வராதபடி நம்மை பாதுகாத்து கொள்கிறது.