Health Tips for Dinner: மாலையிலேயே இரவு உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? - அசத்தல் தகவல்.!

அதனை கருத்தில் கொண்டு இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவது நல்லது.

Weight Loss (Photo Credit: Pixabay)

ஜூலை 12, சென்னை (Health Tips): உணவே மருந்து, ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடு, உழைத்து வாழ் என்பது பழமொழிகளாக மட்டுமல்லாது, தனிமனிதனின் வாழ்க்கையில் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றான மந்திரமாக இருக்கிறது. இன்றுள்ள அவசரமான நவீன உலகில், சரியான நேரத்தில் உணவுப்பொருட்களை சாப்பிட முடியாதது, வீட்டு வேலை மற்றும் பணிச்சுமை போன்ற காரணத்தால் நேரம் தவறி உணவுகளை எடுத்துக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை சீரழித்து வருகின்றனர்.

நேரம் கடந்து சாப்பிட கூடாது:

இவ்வாறான செயல்கள் தெரிந்தும், தெரியாமலும், வேறு வழியின்றி தொடரத்தான் செய்கிறது. சிலர் இரவு நேரங்களில் 09:30 மணியை கடந்து தாமதமாக சாப்பிடுகின்றனர். இரவு உணவை மாலை 06:00 மணிக்கு முன்னதாக அல்லது 08:00 மணிக்குள் எடுத்துக்கொள்வது என நேரத்தை செயல்படுத்தி உணவுகளை சாப்பிடலாம். இவ்வாறானவை அல்லாமல் தாமதமான சாப்பாடு மிகப்பெரிய உடல் மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். World Paper Bag Day 2024: உலக காகிதப் பை தினம்.. காகிதப் பை பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன?! 

சரியான நேரத்தில் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்படுத்துங்கள்:

இந்த விஷயம் தொடர்பாக வெளியான ஆய்வு முடிவுகளின்படி, இரவு நேரங்களில் தாமதத்துடன் உணவை சாப்பிடுதல் என்பது வளர்சிதை மாற்றத்தினை மாற்றும் தன்மை கொண்டது ஆகும், குளுக்கோஸ் வளர்சிதை செயலிழப்பை ஊக்குவிக்கும். அதேபோல, உணவை முன்கூட்டியே 6 - 8 மணிக்குள் சாப்பிடுவது இரத்த குளுக்கோஸ், இன்சுலின் உணர்திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி நேர்மறை விளைவை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

உடல் எடை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்:

இரவு தாமதமாக உணவை உண்பதால், உணவு ஜீரணமாக போராடும். சரியான நேரத்தில் உணவை சாப்பிடுதல், எளிய ஜீரணத்திற்கு வழிவகை செய்யும். ஜீரணம் சார்ந்த அசௌகரிய உணர்வுகளையும் சரியாக்கும். உறங்குவதற்கு முன்பு வயிறும் ஏறக்குறைய காலியாகிவிடும். தூக்கத்தின் தரம், காலை விழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும். தாமதம் கொண்டு எடுத்துக்கொள்ளப்படும் இரவு உணவுகள் செரிமானக்கோளாறுகளை உண்டாக்கி, உடல் எடை அதிகரிக்க காரணியாக அமைந்துவிடும்.