Pregnant Women Dental Problem: கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல் வலி; அசத்தல் ஆலோசனைகள் இதோ.!

ஈறுகளில் நோய், இரத்தம் மற்றும் சீல் வடிதல் என்பது இவ்வாறான காலங்களில் இயல்பானவை என்பதால், மருத்துவரை அலட்சியமாக சந்திக்காமல் இருத்தல் கூடாது.

Pregnant Women Dental Smile (Photo Credit: Pixabay)

ஜூலை 25, சென்னை (Health Tips): பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் புதிய உணர்ச்சிகள், அனுபவங்கள் ஏற்படும். இவை சில பெண்களுக்கு சங்கடமான பக்கவிளைவாகவும் இருக்கலாம். கருவுற்று இருக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளில் பல் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளும் இருக்கின்றன.

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பல் வலி ஏற்படுவது இயல்பு. கர்ப்பத்தின்போது ஹார்மோன் அதிகரிப்பு காரணமாக கிருமிகள் ஊடுருவலாம். இதனால் பற்கள் தானாக பாதிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களின் பற்களை பொறுத்த குழந்தைகளின் பல்லும் அமையும்.

கருவுற்ற காலங்களில் குறைந்த கால்சியம் சத்துக்களை கொண்டிருந்தால், குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து தாயின் எலும்பில் இருந்து பெறப்படும். இதனால் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு தனது உடலுக்கு தேவையான கால்சிய சத்து கிடைக்காமல் பல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. Sonu Sood: 50 வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் நடிகர் சோனு சூட்; பலரையும் வியக்கவைத்த சிக்ஸ் பேக் ஸ்டில் இதோ.!

இவ்வாறான காலங்களில் பற்கள் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க புளூரைடு பற்பசை கொண்டு இரண்டு வேளை தினமும் பல் துலக்கலாம். பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவசியம் அல்லது சந்தேகம் இருப்பின் பல் மருத்துவரை நாடி ஆலோசனை பெறுவது நல்லது.

ஈறுகளில் நோய், இரத்தம் மற்றும் சீல் வடிதல் என்பது இவ்வாறான காலங்களில் இயல்பானவை என்பதால், மருத்துவரை அலட்சியமாக சந்திக்காமல் இருத்தல் கூடாது. பல் சொத்தையை சரி செய்ய தேவையானவற்றை கடைபிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் கிராம்பு துண்டுகளை மென்று சாப்பிடலாம். இவை எளிய வீட்டு வைத்தியம் ஆகும்.

பூண்டும் கிராம்பை போல பல் வலியில் இருந்து நிவாரணம் வழங்கும். வெதுவெதுப்புடன் உள்ள நீரில் உப்பு சேர்த்து வாயை கொப்புளிக்கலாம். இவை வாய்வழி பாக்டீரியாக்களை குறைக்கும். பக்கவிளைவை தரும் மருந்துகளை எக்காரணம் கொண்டும் உபயோகம் செய்ய வேண்டாம். மருத்துவரை நாடுவது நல்லது.