Beetroot Rice Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பீட்ரூட் சாதம் செய்வது எப்படி..?
சுவையாக பீட்ரூட் சாதம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
அக்டோபர் 09, சென்னை (Kitchen Tips): இன்றைய காலக்கட்டத்தில் நாம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவை சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. அவை சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய உடல்நலனை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டுமென்பதே பலருடைய எதிர்பார்ப்பாகும். அப்படிப்பட்ட சுவையான, ஆரோக்கியமான பீட்ரூட் சாதம் (Beetroot Rice) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதனை நாம் வீட்டிலேயே மிக எளிதில் செய்யலாம். இதனை குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - கால் கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - அரை மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து. karaikudi Nandu Masala Recipe: காரைக்குடி ஸ்பெஷல் நண்டு மசாலா சுவையாக செய்வது எப்படி..?
செய்முறை:
- முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 8 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, மூடி போட்டு மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- பிறகு பீட்ரூட்டை (Beetroot) துருவி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வேகவைக்க வேண்டும்.
- பீட்ரூட் வெந்ததும் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, கொத்த மல்லியைத் தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சாதம் ரெடி.