Chettinad Vazhakkai Varuval Recipe: செட்டிநாடு ஸ்டைலில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
சூடான, சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
அக்டோபர் 18, சென்னை (Kitchen Tips): செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தால் இந்த ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள். ஒரு அற்புதமான சுவையில் வாழைக்காய் (Plantain) வைத்து செட்டிநாடு ஸ்டைலில் வறுவல் செய்யலாம். இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinad Vazhakkai Varuval) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். Poosanikai Puli Kuzhambu Recipe: மணமணக்கும் பூசணிக்காய் புளிக்குழம்பு சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மல்லி தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - அரை பழம்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - சிறு துண்டு (பேஸ்ட்)
சோம்பு - சிறிதளவு
உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் வாழைக்காயை (Raw Banana) தோல் சீவி சிறு வட்ட துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.
- பின் தண்ணீரை வடிகட்டி வேகவைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக எடுத்து ஆறவைக்கவும். ஆறவைத்த வாழைக்காய் துண்டுகளின் மேல் தேவையான அளவு உப்பு சேர்த்து, சோம்புத்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைசாறு, மல்லித்தூள், மிளகாய்தூள் சிறிது நீர் தெளித்து பிசறிவிட்டு 10 நிமிடம் ஊறவிடவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வாழைக்காய்களை சிறிது சிறிதாக போட்டு இரு புறமும் வெந்ததும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும், சிறிது சோம்பு சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில், வறுத்து வைத்திருக்கும் வாழைக்காய்களை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறிவிட்டு வேக வைக்கவும். சுமார் ஐந்து நிமிடம் கழித்து வாழைக்காயை எடுத்து பாத்திரத்தில் வைக்கவும். அவ்வளவுதான் சூடான, சுவையான செட்டிநாட்டு வாழைக்காய் வறுவல் ரெடி.