Ragi Murukku Recipe: மொறுமொறுப்பான ராகி முறுக்கு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தீபாவளி ஸ்பெஷலாக ராகி முறுக்கு எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.
அக்டோபர் 26, சென்னை (Kitchen Tips): இன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் (Diwali) ரெசிபியாக மொறுமொறுப்பான ராகி முறுக்கு (Ragi Murukku) வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது உடல் எடையை குறைக்க உதவும். மேலும், உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒன்றரை கப்
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
வரமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
எள்ளு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு. Beetroot Chutney Recipe: சத்தான பீட்ரூட் சட்னி சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் ஒரு பெரிய பவுலில் ராகி மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கொள்ளவும். காரத்திற்கு வரமிளகாய் தூள், எள், ஓமம், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.
- இப்போது தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மிருதுவாக மாவை பிசைந்து கொள்ளவும். கடைசியாக மாவு மீது சூடான எண்ணெய் சிறிது ஊற்றி பிசைந்து, சிறிது மாவை எடுத்து அச்சியில் வைத்து வாழை இலையின் மீது நன்றாக அழுத்தி முறுக்கை பிழியவும்.
- பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், முறுக்கை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெய்யில் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவிட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சூப்பரான மொறு மொறு ராகி முறுக்கு தயார்.