Mochai Kottai Karakulambu Recipe: சுவையான மொச்சை கொட்டை காரக்குழம்பு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
அருமையான சுவையில் மொச்சை கொட்டை காரக்குழம்பு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஜூலை 10, சென்னை (Kitchen Tips): பொதுவாக பயிறு வகைகளில் தான் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த பயிறு வகைகளில் ஒன்றான மொச்சை கொட்டையை வைத்து சுவையான காரக்குழம்பு எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம். பெரும்பாலும் கிராமங்களில் தான் இந்த மொச்சை குழம்பு அடிக்கடி செய்வார்கள். அப்படிப்பட்ட இந்த மொச்சை கொட்டை காரக்குழம்பு (Mochai Kottai Karakulambu) சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மொச்சை - 2 கப்
எண்ணெய் - கால் கப்
கடுகு, உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி, வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பல் (உரித்தது)
மிளகாய் தூள், மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 3 தேக்கரண்டி
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
சர்க்கரை - சிறிதளவு
தண்ணீர், உப்பு - தேவையான அளவு. Catfish Swimming On Railway Tracks: உள்ளூர் ரயில் தண்டவாளத்தில் மிதக்கும் கேட்ஃபிஷ்கள்; கனமழை காரணமாக நீரில் நீந்தி செல்லும் மீன்கள்.. வீடியோ வைரல்..!
வறுக்கவும், அரைக்கவும் தேவையான பொருட்கள்:
பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
இஞ்சி எண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி, வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 4
தேங்காய் - அரை கப் (துருவியது)
செய்முறை:
முதலில் மொச்சையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர், குக்கரில் எடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். குக்கரில் 6 விசில் வைத்து, 15 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடேற்றி, பெருஞ்சீரகம் விதைகளை சேர்த்து வதக்க வேண்டும். அதில் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்க்கவும். அதனை 2 நிமிடம் வதக்கவும். தேங்காய் சேர்த்து 3 முதல் 4 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும். அதை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். Thangalaan Trailer Out: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீடு.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!
பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். அதில் மசாலா பொடிகள், உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
புளி தண்ணீர், தண்ணீர், அரைத்த மசாலா, உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும். அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து, எண்ணெய் மேலே மிதக்கும் வரை 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அவ்வளவுதான் ருசியான மொச்சை கொட்டை காரக்குழம்பு ரெடி.