Poosanikai Puli Kuzhambu Recipe: மணமணக்கும் பூசணிக்காய் புளிக்குழம்பு சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
பூசணிக்காய் புளிக்குழம்பு மிகவும் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
அக்டோபர் 17, சென்னை (Kitchen Tips): நாம் தினம்தோறும் பல்வேறு வகையான குழம்புகளை சமைத்து சாப்பிடுகிறோம். அதிலும், கிராமப்புறங்களில் புளிக்குழம்பு அடிக்கடி சமைப்பார்கள். எப்போதும் ஒரே மாதிரி ஸ்டைலில் சமைக்காமல் சற்று வித்தியாசமான முறையில், மஞ்சள் பூசணிக்காயை (Pumpkin) வைத்து சுவையான புளிக்குழம்பு (Poosanikai Puli Kuzhambu) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். இது மிகவும் சுவையாக இருக்கும். Balakai Chops Recipe: பலாக்காய் சாப்ஸ் மிக சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசணிக்காய் – 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காய வடகம் - 6 துண்டு
சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்துக் கொள்ளவும்),
தக்காளி - 1 (நறுக்கியது)
வெல்லம் - ஒரு சிறு துண்டு
பூண்டு - 6 பல் (தோலுரித்துக் கொள்ளவும்)
மல்லித் தூள் - 3 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்,
- பின்னர், அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1-2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
- பின்பு, அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- அடுத்து, அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கிளறி விடவும்.
- பிறகு, அதில் புளி தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி சுமார் 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- அதன்பின் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு ரெடி.