Beetroot Chutney Recipe: சத்தான பீட்ரூட் சட்னி சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
அக்டோபர் 25, சென்னை (Kitchen Tips): நம் உணவில் சத்தான காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நல்லது. அதிலும், பீட்ரூட்டை (Beetroot) உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். ஏனெனில், பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. வீட்டில் இட்லி, தோசைக்கு சிறந்த மற்றும் சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைத்தால், பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான சட்னி செய்யலாம். இந்த பீட்ரூட் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். பீட்ரூட் சட்னி (Beetroot Chutney) சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
பச்சை மிளகாய் - 3
சீரகம் - கால் கரண்டி
பூண்டு - 2 பல்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - ஒன்றரை கைப்பிடி
எலுமிச்சை - அரை மூடி
தேங்காய் - அரை மூடி
இஞ்சி - 1 இன்ச் அளவு
உப்பு - தேவையான அளவு. Kambu Adhirasam Recipe: தீபாவளி ஸ்பெஷல்! கம்பு அதிரசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி எடுத்து ஈரத்தை உலரவிடவும்.
- அடுத்து, பூண்டு மற்றும் இஞ்சியின் தோல் நீக்கி வைக்கவும். தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, விதைகளை நீக்கி வைக்கவும். இப்போது மிக்ஸியில் நறுக்கிய பீட்ரூட், புதினா, கொத்தமல்லி இலைகள், பூண்டு, இஞ்சி, மற்றும் தேங்காய் சேர்க்கவும்.
- அதனுடன் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.பின் அதில் சீரகம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, கடைசியாக அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
- இப்போது, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும். பின், அதில் கருவேப்பிலை சேர்க்கவும்.
- அதனுடன் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். கடைசியாக பெருங்காயம் சேர்த்து, சட்னி உடன் சேர்த்தால், அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சட்னி ரெடி.