Aval Kesari Recipe: சுவையான அவல் கேசரி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
ஏப்ரல் 27, சென்னை (Kitchen Tips): வைட்டமின், நார்ச்சத்து உட்பட ஏராளமான சத்துகள் நிறைந்த, உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய அவல் கேசரி (Sweet Aval Kesari) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அவல் - 3 கப்
சர்க்கரை - 3 கப்
கேசரி பொடி, ஏலக்காய் பொடி - தலா 1 தேக்கரண்டி
முந்திரி - 15
நெய், குங்குமப்பூ - சிறிதளவு
தண்ணீர் - தேவைக்கேற்ப
உலர் திராட்சை - சிறிதளவு. A Girl Cheated On Her Husband And Ran Away: கணவனை கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வரச் சொல்லி திட்டம்போட்டு தப்பியோடிய சிறுமி..! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
செய்முறை:
முதலில் அவலை கடாயில் கொட்டி வறுத்து, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு, அடுப்பில் கடாயை வைத்து சூடேற்றி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதனுடன் குங்குமப்பூ மற்றும் கேசரி பொடியினை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பின்னர், அரைத்து வைத்துள்ள அவலை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அதில் சர்க்கரையை கலந்து நன்கு கிளறிவிட வேண்டும். இதனையடுத்து, முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து வைத்துக்கொள்ளவும். அவல் நன்றாக வெந்த பிறகு, அதில் ஏலக்காய்த்தூள், வறுத்து வைத்த உலர் திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான அவல் கேசரி ரெடி.