Banana Payasam Recipe: சுவையான வாழைப்பழ பாயாசம் செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!
ஏப்ரல் 13, சென்னை (Kitchen Tips): வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். வாழைப்பழத்தை கொண்டு பாயாசம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பழுத்த பூவன் வாழைப்பழம் - 3
பால் - 3 கப்
மில்க்மெய்ட் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - அரை கரண்டி. 10 Years Jail For The Teenager: மதுபோதையில் காவலரை பிளேடால் வெட்டிய வாலிபர்; 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு, பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு சுண்டக் காய்ச்சிக்கொள்ளவும். அதில், நறுக்கி வைத்த வாழைப்பழத்தை சேர்த்து, அதோடு சர்க்கரை கலந்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். எல்லாம் சேர்ந்து கொதிந்து வந்த பிறகு, அதில் ஏலக்காய்த்தூள், மில்க்மெய்ட் சேர்த்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ பாயாசம் தயார். சர்க்கரை சேர்த்து கொள்ள விரும்பாதவர்கள் வெல்லம் சேர்த்து கொள்ளலாம். வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகள் கூட இதனை விரும்பி உண்பர்.