Cooking Tips: தோல் வியாதிகளுக்கு மருந்தாக சின்ன வெங்காயம்-கறிவேப்பில்லை குழம்பு; மனமனக்க வீட்டில் செய்வது எப்படி?..!
ஏனெனில் அவை நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை வழங்குகிறது.
மே 10, சென்னை (Cooking Dairies): நமது தென்னிந்திய சமையலில் எந்த உணவு சமைத்தாலும், அதில் நீங்காது இடம்பெறும் விஷயங்களில் முக்கியமான ஒன்று கறிவேப்பில்லை. இதனை நன்கு மென்று சாப்பிட தோல் வியாதிகள் சரியாகும். இதயத்தை பாதுகாக்கும். இன்று கறிவேப்பில்லை - வெங்காய குழம்பு செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
விழுதுக்கு தேவையானவை;
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
துவரம் பருப்பு - 2 சிறு கரண்டி,
கடலை பருப்பு - 1 சிறு கரண்டி,
மிளகு - 2 சிறு கரண்டி,
தனியா - 1 சிறு கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5 (காரத்திற்கேற்ப),
தேங்காய் துருவல் - சிறிதளவு,
கொழுந்தான கறிவேப்பில்லை - கையளவு,
குழம்புக்கு தேவையானவை;
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள் - தலா அரை கரண்டி,
பெருங்காயத்தூள் - 1/4 கரண்டி,
சின்ன வெங்காயம் - 6,
பூண்டு பற்கள் - 5,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட சிறிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். புளியை நீரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுக்கவும். இவை ஆறியதும் மிக்சி அல்லது அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெங்காயம், பெருங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். 5 நிமிடத்திற்குள் வெங்காயம் மற்றும் பூண்டையும் சேர்த்து வதக்கவும். இதனோடு அரைத்த விழுதுகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் ஆகியவை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கெட்டியானதும் இறக்க வேண்டும். இப்போது சுவையான கறிவேப்பில்லை-சின்ன வெங்காயம் தயார்.