Crab Soup Preparation: சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டுமா?. அசைவ பிரியர்களுக்கு ஏற்ற நண்டு சூப்.. செய்வது எப்படி?..!
இன்றளவில் நண்டு சார்ந்த உணவுகள் பல நகரங்களில் எளிதில் கிடைக்கின்றன. அதனை சூப் வைத்தும் பருகலாம்.
டிசம்பர் 01, சென்னை (Chennai): அசைவ பிரியர்களின் கடல் உணவுகளில் நண்டு எப்போதும் முக்கியமான, அதிகம் பிடித்த உணவுகளில் ஒன்று. ஏனெனில் நண்டு குழம்பு (Crab Curry) சாப்பிட சுவையாக இருக்கும். இறைச்சி வகை உணவுகளில் கடல் மற்றும் நன்னீர் மீன்கள், நண்டுகள் பல சத்துக்களை தன்னகத்தே கொண்டவை. இவற்றை நாம் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
குழந்தைகளுக்கு நல்லது: நண்டில் உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் புரோடீன், எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் கால்சியம் நிறைந்து கிடக்கிறது. நண்டு வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது, அவர்களின் எதிர்கால உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது. பருவகாலங்களில் ஏற்படும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் நண்டு சூப் வைத்தும் குடிக்கலாம். FIFA rankings: பீபா ரேங்கிங்கில் 2 புள்ளிகள் பின்தங்கிய பிரேசில்: அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் தொடர்ந்து முதலிடம்..!
சளி-இருமலில் இருந்து விடுதலை: தொடர் சளி, இருமல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வோர், நண்டு வாங்கி சமைத்து சாப்பிடலாம். இதனால் சளி, இருமல், தொண்டை வலி சார்ந்த பிரச்சனைகளும் சரியாகும். சளி, இருமல் சரியாகிவிட்டாலே, காய்ச்சலும் சரியாகிவிடும். இன்று நண்டு சூப் எப்படி வைப்பது என தெரிந்துகொள்ளலாம்.
நண்டு சூப்: ஆனால் சளி பிடிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மனதில் ஆசை தோன்றி விட்டால் உடனே சமைத்து சாப்பிடுங்கள். கிராமங்களில் கை வைத்தியமாக வயல் வெளியில் கிடைக்கும் நண்டுகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது வழக்கம். நண்டு சூப் வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நண்டு - 2,
தக்காளி நறுக்கியது - 1,
பெரிய வெங்காயம் நறுக்கியது - 1,
இஞ்சி - சிறிதளவு,
மிளகு அல்லது வீட்டில் அரைக்கப்பட்ட மிளகுத்தூள் - அரை கரண்டி,
சீரகம் - கால் கரண்டி,
எண்ணெய் - 3 கரண்டி,
பூண்டு - 4 பற்கள்,
பச்சை மிளகாய் - 2,
பட்டை, கொத்தமல்லி தழை, பிரியாணி இலை - தேவையான அளவு,
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நாம் எடுத்துக்கொண்ட நண்டை முதலில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் நண்டின் சதைப்பகுதியை தட்டி எடுத்து வைக்கவும். இஞ்சி - பூண்டு விழுதையும் தயார் செய்துகொள்ளவும். Animal Part 2: ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்.. இரண்டாம் பாகத்திற்கு அறிவிப்பை கொடுத்த படக்குழு: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
வாணெலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கியதும் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க விடவேண்டும்.
முதல் கொத்தி வந்ததும் நண்டு, சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும். சூப் பதத்திற்கு நன்கு கொதித்ததும் இறக்குவதற்கு சிறிது நேரம் முன்பு மிளகு மற்றும் சீரகத்தூளை சேர்க்க வேண்டும். வாணெலியை இறக்கும் தருவாயில் நண்டு ஓடுகளை வடிகட்டி நீக்கிவிட்டு, கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான நண்டு சூப் தயார்.