Potato Murukku: சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை உருளைக்கிழங்கை வைத்து முறுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டு தங்களின் ஆசையை தீர்த்துக்கொள்வார்கள்.
செப்டம்பர் 03, சென்னை (Cooking Tips): புரட்டாசி மாதம் என்றாலே, பெரும்பாலான வீடுகளில் அசைவ வகையிலான உணவுகள் தவிர்க்கப்படும். இதனால் அசைவ பிரியர்கள், தங்களின் நாவை சுவைக்க வைக்கும் உணவுகளை தேடி ஓடுவார்கள்.
அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை உருளைக்கிழங்கை வைத்து முறுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டு தங்களின் ஆசையை தீர்த்துக்கொள்வார்கள்.
உருளைக்கிழங்கு முறுக்கு செய்யத் தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கிண்ணம்,
உளுந்து - 2 கிண்ணம்,
வெண்ணெய் - 2 தே. கரண்டி,
சீரகம் - 1 தே. கரண்டி,
உருளைக்கிழங்கு - 2,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு..
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட மிளகை, உரலில் இட்டு பாதியளவு உடைத்து எடுக்க வேண்டும். பின் உளுந்தை மிதமான தீயில் சிவக்கும் நிறத்தில் வறுக்க வேண்டும்.
பின்னர், உளுந்தை உலர்ந்த மாவாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, உருளைக்கிழங்கு மசியல், சீரகம், மிளகு, உப்பு, வெண்ணெய், நீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு இடியாப்பம் மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
இறுதியாக வாணெலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தபின் முறுக்கு சுடும் அச்சு கொண்டு முறுக்கை சுடலாம்.
சிவக்கும் நிறம் வந்ததும் எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.