Eyes Problem: பேராபத்து.. செல்போன், டிவியை இப்படி உபயோகம் செய்கிறீர்களா?.. கண்களின் ஆரோக்கியத்தை அழிவில் இருந்து தடுக்க வழிமுறைகள்.!

ஆனால், கண்களில் ஏற்படும் வறட்சியால் கவனம் சிதறுவது, தலைவலி போன்றவை உண்டாகின்றன.

Template: Man Use Mobile & Television

டிசம்பர், 11: இன்றுள்ள நவீன காலகட்டத்தில் கண்களின் பாதுகாப்பு (Eyes Safety) என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமாகிவிட்டது. ஆனால், கண்களில் ஏற்படும் வறட்சியால் கவனம் சிதறுவது, தலைவலி போன்றவை உண்டாகின்றன. இவற்றில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இன்று காணலாம். கீழ்காணும் வழிமுறைகள் பொதுவானது என்பதால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

இரவு நேரங்களில் கண்கள் விழித்து கணினி, செல்போன், தொலைக்காட்சி (Computer, Mobile, TV) போன்றவற்றை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருந்து பின் உறங்குவது கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் இருந்து நீர் வடிவது, கண்களில் எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்படும். நாளொன்றுக்கு 8 மணிநேர உறக்கம், ஆரோக்கியமான உணவு, ஓய்வு போன்றவையே கண்களை பாதுகாக்கும்.

இதில், எதிர்பாராத விதமாக கண்களில் தூசி விழுந்துவிடும் பட்சத்தில், தூய்மைமிக்க குளிர்ந்த நீரை கொண்டு கண்களை கழுவலாம். கண்களில் எண்ணெய் அல்லது சுயமாக மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளை விடுவது நல்லதல்ல. தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பிற வெளிச்சம் இருக்கும் சூழ்நிலையில் பார்க்க வேண்டும். World Beautiful Places: உலகளவில் அழகிய இடங்கள் என்னென்ன?.. இந்தியாவையே பெருமைப்படுத்தும் அழகை கொண்டுள்ள மாநிலம் இதுதான்.! 

Laptop

இருண்ட இடங்களில் வைத்து செல்போன், கணினி போன்றவற்றை பார்த்தால், அவற்றின் வெளிச்ச கதிர்வீச்சு விழிப்படலத்தை பாதிக்கும். மேலும், கணினியின் திரை கண்பார்வைக்கு கீழே இருக்குமாறு பார்க்க வேண்டும். 20 நிமிடம் கணினியை தொடர்ந்து இயக்கினால், அதற்கடுத்த நிமிடம் வேலையை புறந்தள்ளி 20 முறை கண்களை சிமிட்ட வேண்டும்.

இதனால் கண்களில் ஈரப்பதம் ஏற்பட்டு கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கோடையில் கண்களில் உடலில் வறட்சி ஏற்படுவதை போல், கண்களிலும் வறட்சி என்பது ஏற்படும். இதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் குளியல் எடுக்கலாம். இது உடலின் சூட்டினை தணிக்கவும், கண்கள் குளிர்ச்சியடையவும் உதவும்.

வைட்டமின், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், மீன், இறால் போன்ற உணவுகளை சாப்பிடுதல் கண்களுக்கு நல்லது. மீனில் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பால் & பால் சார்ந்த உணவுகள், கீரை, ஆரஞ்சு, மஞ்சள், முட்டை, காய்கறிகள் & பழங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 12:09 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).