IPL Auction 2025 Live

International Dance Day 2024: "கண்ணிரண்டும் இசைபாட.. கையிரண்டும் தாளமிட.. காலிரண்டும் நடனமாட.." சர்வதேச நடன தினம்..!

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நடன தினம் ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.

International Dance Day (Photo Credit: LatestLY)

ஏப்ரல் 29, புதுடெல்லி (New Delhi): சர்வதேச நடன தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. UNESCOவின் கலை நிகழ்ச்சிகளுக்கான முக்கிய பங்களிப்பான சர்வதேச நாடக நிறுவனத்தின் (International Theatre Institute) (ITI) நடனக் குழுவால் 1982 ஆம் ஆண்டில் இந்த நாள் உருவாக்கப்பட்டது. மேலும் நவீன பாலே உருவாக்கியவர் என்று அழைக்கப்படும் ஜீன்-ஜார்ஜஸ் நோவர் (1727-1810) பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 29 ஆம் நாளில் சர்வதேச நடன தினம் (International Dance Day) ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.

முக்கியத்துவம்: பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக் கல்வியை ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் சர்வதேச நடன தினத்தின் முக்கிய இலக்காக இருக்கிறது. International Sculpture Day 2024: "பலமுறை கண்ட சிற்பம்.. ஒரு முறைகூட காணாத அழகு.." சர்வதேச சிற்பக் கலை தினம்..!

நடனங்களின் வகைகள்: துக்கமும் கொண்டாட்டமாக மாறும் கலை, நடனத்தில் மட்டுமே சாத்தியம். உலகம் முழுவதும் பல்வேறு நடனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமே பல உள்ளன. தமிழ்நாட்டில் பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து (Bharatanatyam, Kolattam, Kummiyattam, Terukuthu), கேரளாவில் சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஆந்திராவில் குச்சுப்பிடி, கர்நாடகாவில் யக்ஷகானம், மணிப்பூரில் மணிப்புரி, லாய்-ஹரோபா, பஞ்சாப்பில் பாங்ரா, கிட்டா, பீகாரில் பிதேஷியா, நாச்சாரி, அஸ்ஸாமில் பிகு, ஜம்மு-காஷ்மீரில் சக்ரி, ரூக்ப் என்றவாறு பல்வேறு நடனங்கள் இருக்கின்றன.