Krishna Jayanthi 2024: "எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ., அப்போதெல்லாம் நான் வருவேன்" - இன்று கிருஷ்ண ஜெயந்தி.. வாழ்த்துக்கள் ஆன்மீக சொந்தங்களே.!
அதர்மத்தை அழிக்க நான் வருவேன் என்ற வாசகத்தை பூவுலகுக்கு தந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாள் இன்று கிருஷ்ண ஜெயந்தியாக சிறப்பிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 26, சென்னை (Festival News): உலகளவில் உள்ள இந்துக்கள் பெருவாரியாக சிறப்பிக்கும் பண்டிகைகளில் முக்கியமானது கோகுலாஷ்டமி (Gogulastami). கிருஷ்ண ஜெயந்தி (Krishna Janmashtami 2024), கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இப்பண்டிகை, 26 ஆகஸ்ட் 2024 இன்று சிறப்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட நல்ல நேரமாக இன்று இரவு 11:48 மணிமுதல் 12:34 வரை கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளின் மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் கிருஷ்ண ஜெயந்திக்கான பூஜைகளை மேற்கொள்ளலாம். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், பால் பாயசம் ஆகியவற்றை வைத்தும் வழிபடலாம். Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தி 2024; தேதி, நகர வாரியான நேரம் மற்றும் பூஜை முறைகள்..!
கிருஷ்ணர்-ராதையாகும் மழலைகள்:
பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஒன்பதாவது அவத்ரமான கிருஷ்ணாவதாரம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை வாயிலாக பல்வேறு விஷயங்களை நமக்கு கடமைகளாக விட்டுச்சென்றது. அவற்றை பின்பற்றி நல்வழியில் இருப்போரை காக்கவும், தீவழியில் மக்களுக்கு அதர்மம்செய்து இருப்போரை அழிக்கவும் கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுப்பேன் எனவும் உரைத்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி நாளில் வீட்டில் இருக்கும் செல்லக் குழந்தைகளை கிருஷ்ணர், ராதை போல வேடமிட்டு மகிழ்வதும் நடக்கிறது. ஆவணிமாத பௌர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை 8 வது நாளில், அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம் இணைந்த நன்னாளில், ரிஷப லக்கினத்தில் மதுரா நகரில் இருக்கும் சிறைச்சாலையில் கிருஷ்ணர் அவதரித்தார் என்பது சன்னதோர் வாக்கு. Paal Kozhukattai Recipe: கிருஷ்ணருக்கு பிடித்த பால் கொழுக்கட்டை சுவையாக செய்வது எப்படி..?
எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அங்கெல்லாம் அதர்மத்தை அழிக்க நான் வருவேன் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.