Good Friday: கிறித்துவர்கள் திரளாக சிறப்பிக்கும் புனிதவெள்ளி; இயேசு கிறிஸ்துவின் இறுதி நிமிடங்கள்..!

இன்று நண்பகல் 3 மணிக்கு மேல் கிருத்துவ தேவாலயங்கள் இயேசு தோன்றும் காட்சியும், அவர் விண்ணுலக பயணத்திற்கான கதவை திறந்த நிகழ்வும் நடக்கும்.

Good Friday (Photo Credit: Pixabay)

மார்ச் 29, டெல்லி (New Delhi): மனித குலத்தை பாவத்தில் இருந்தும், மரணத்தில் இருந்தும் மீட்க தனது வாழ்வை மனிதருக்காக அர்ப்பணித்து இறைவாழ்க்கை மேற்கொண்ட இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பம் மற்றும் சிலுவையில் ஆணிகளால் பிணைக்கப்பட்ட துயரம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து, அவர்வழி அன்புடன் வாழ கிறித்துவர்கள் சிறப்பிக்கும் முக்கிய நினைவுகூறல் நிகழ்வாக புனிதவெள்ளி (Good Friday) இருக்கிறது..

சிலுவையில் அறையப்பட்ட பின்னர் இறைவனை ஏன் தன்னை கைவிட்டாய்? என கேள்வி எழுப்பியதாகவும், அவர்களின் பாவத்தை மன்னிக்க கூறி கோரிக்கை வைத்ததாகவும் கூறுவார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்நிகழ்வை மக்கள் நினைவுகூர்ந்து (Punitha Velli), தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.

சிறப்பு பிரார்த்தனைகள்: இன்று நண்பகல் 3 மணிக்கு முன் கத்தோலிக்க திருச்சபைகளில் சிலுவைகள் அகற்றப்பட்டு இருக்கும். பின் 3 மணிக்கு மேல் சிறப்பு பிரார்த்தனைகள் அனைத்தும் அடுத்தடுத்து நடைபெறும். சிலுவையில் அடைக்கப்பட்டவாறு உயிர்துறந்த இயேசு, மக்களுக்காக விண்ணுலக வாயில திறந்துவைத்தார் என்பது நம்பிக்கை. அதனை நினைவுகூரும் வகையில் தேவாலயத்தில் நடைபெறும் விழாவில், இயேசு தோன்றியபின் மக்கள் அமைதியாக கலந்து செல்வர்.

இரட்சிக்கும் இறைவனை தலைவனாக கொண்ட ஒவ்வொரு கிறித்துவர்களும் இறைவன் வழி நடக்க ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.