Karthikai Deepam in Nilgiris: நஞ்சநாட்டில் பழங்குடியின முறைப்படி சிறப்பிக்கப்பட்ட கார்த்திகை தீபத்திருநாள்: அசத்தல் வீடியோ இதோ.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில், லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கார்த்திகை திருநாளானது சிறப்பிக்கப்பட்டது.
நவம்பர் 28, நீலகிரி (Nilgiris News): கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை (Karthikai Festival) பௌர்ணமி நாளில், கார்த்திகை தீபத்திருநாள் வெகுவிமர்சையாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஜோதியாக காட்சி தந்தருளி, ஒவ்வொரு வீட்டிலும் குடிகொண்டார்.
இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் (Tiruvannamalai Deepam) குவிந்து, அவர்களின் அரோகரா, ஓம் நமச்சிவாய கோஷங்களுக்கு மத்தியில் திருவண்ணாமலையில் ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்களுக்கு அங்கு ஜோதியாக அருணாச்சலேஸ்வரர் காட்சி தருகிறார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சநாடு (Nanjanad, Nilgiris) கிராமத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய முறைப்படி, நவம்பர் 27 ஆம் தேதியான நேற்று கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நஞ்சநாட்டில் உள்ள 350 கிராமங்களைச் சார்ந்த மக்கள், நஞ்சநாட்டில் குவிந்து கார்த்திகை தீபத்திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி சிறப்பித்தனர். அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு (Thadikombu, Dindigul) பெருமாள் கோவிலில், லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கார்த்திகை திருநாளானது சிறப்பிக்கப்பட்டது.
நஞ்சநாடு திருவிழா வீடியோ:
தாடிக்கொம்பு திருவிழா வீடியோ: