Girl Baby Tips: பெண் குழந்தைகளிடம் கட்டாயம் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?.. பெற்றோர்களுக்கு டிப்ஸ் இதோ.!
ஆணும்-பெண்ணும் சரிசமம் என்பதை வாய்வார்த்தையோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்கள் உணரும் வகையில் பெற்றோர்கள் வழிநடத்த வேண்டும்.
ஜூலை 04, ஆரோக்கியம் (Health Tips): நமது வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, இன்றளவில் சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் சொல்லிக்கொடுக்க கூடாத விஷயங்கள் என்பவை முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றன. இன்று சொல்லக்கூடாத விஷயம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
பெண் குழந்தைகளுக்கு அச்சத்தினை தரும், தாழ்வு மனப்பான்மை உண்டாகும் வகையிலான செயல்களை சொல்லுதல் மற்றும் செய்ய வற்புறுத்துதல் என்பது கூடாது.
ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை விடவும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை தவிர்த்தல் வேண்டும். ஆண் குழந்தை பிறந்ததும், மூத்த பெண் குழந்தையின் மீது கவனம் குறையும் சூழலுக்கு இடம்தர வேண்டாம்.
ஆணும்-பெண்ணும் சரிசமம் என்பதை வாய்வார்த்தையோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்கள் உணரும் வகையில் பெற்றோர்கள் வழிநடத்த வேண்டும். மூத்த பெண் குழந்தை தான் அதிக பொறுப்பை எடுக்க வேண்டும் என சிறுமியை அழுத்தம் ஏற்கும் வகையில் செயல்பட கூடாது. Pakistan Cricket Team Tour England: இங்கிலாந்து நாட்டுக்கு செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வெற்றியை எட்டிப்பிடிக்க பயிற்சியை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்.!
எதிர்த்து பேசாது தான் சொல்வதை கேள் என்று கூறாமல், நன்மை மற்றும் தீமைகளை புரியும் வகையில் கூற வேண்டும். பெண் குழந்தைகளை எந்நேரமும் கண்காணித்தல் புதிய முயற்சியில் இறங்கமாட்டார்கள்.
அவர்களின் தனித்திறமை வெளியே தெரியாமல், சுய சிந்தனையும் வளராமல் போகலாம். இதனால் அவர்களை சுதந்திரத்துடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும். கிரிக்கெட், கராத்தே என ஆர்வமுள்ள விஷயங்களை கற்றுக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
இவற்றை பெண்களுக்கு சரிவராது என மறுத்து பேச கூடாது. உலகில் ஆண்களுக்கான துறை என எதுவும் இல்லை. அவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் தடையாக இல்லாமல் தோள்கொடுத்து தூக்கிவிடும் நபராக இருக்க வேண்டும்.
ஆண்குழந்தை அழும் நேரத்தில் தவறு என சொல்பவர்கள், பெண்களுக்கு அதை அடையாளமாக, ஆயுதமாக கையாளும்படி வளர்க்க கூடாது. அழுகையால் இல்லது திறமை, தைரியம், முயற்சியால் வேண்டுவதை பெற ஒத்துழைக்க வேண்டும்.