Amid Plunging Birth Rate: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.62 இலட்சம் போனஸ்: கட்டுமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.!
அமெரிக்க மதிப்பில் 75 ஆயிரம் டாலர் பணம் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்படும் என தென்கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 28, சியோல் (World News): தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது சமீபகாலமாகவே கேள்விக்குறியாகி வருகிறது. அங்குள்ள மக்களிடம் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் மேலைநாடுகளின் கலாச்சார மோகம் போன்றவை பல்வேறு தாக்கங்களை (Booyoung Group Bonus to Employees) ஏற்படுத்தி, குழந்தை பிறப்பு விகிதத்தை சிறுகச்சிறுக பாதித்து தற்போது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை சரிசெய்து மக்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் அந்நாட்டு அரசால் எடுக்கப்படுகின்றன. Holi Celebration Rules Offence Penalty: ஹோலி கொண்டாட்டத்தால் ஆப்பு; விதியை மீறி வாகனத்தை இயக்கியதாக இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ.80,500 அபராதம்.!
சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தும் அரசுகள்: கடந்த 2022ம் ஆண்டு தென்கொரிய நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, பிறப்பு விகிதம் என்பது 0.75 என்ற அளவில் இருந்துள்ளது. 2025ல் குழந்தை பிறப்பு விகிதம் என்பது 0.68 என்ற அபாயகட்ட அளவுக்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் எதிர்காலம் கருதி, குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசு மக்களை வலியுறுத்தி வருகிறது. மேலும், மக்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தேவையான பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி இருக்கிறது. March 29 Release Tamil Movies: ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.. மார்ச் 29 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ..!
பூயோங் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு: இந்நிலையில், தென்கொரியாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனம் பூயோங் (Booyong Constructions Group), தனது நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்க பங்களிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அந்நிறுவனத்தின் ஊழியர்கள் குழந்தையை பெற்றுக்கொண்டால், அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கத்தொகையாக 75000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.62 இலட்சம்) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைவர் லீ ஜோங் கெயுன் (Lee Joong-Keun) தெரிவித்துள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)