Tips for Menstruation Day Pain Relief: மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியால் அவதியா?.. இதை முயற்சித்து பாருங்கள்.. அசத்தல் டிப்ஸ்.!

ஒவ்வொரு பெண்களும் இதனை தெரிந்துகொள்ளுங்கள்.

Periods Pain Food (Photo Credit: Pixabay)

அக்டோபர் 31, சென்னை (Health Tips): பெண்களுக்கு இயற்கையாக பருவமடைந்த பின்னர், மாதம் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை சுழற்சி முறையில் மாதவிடாய் (Periods) ஏற்படுவது உண்டு. இந்நாட்கள் மாதவிடாய் (Menstruation Cycle) சுழற்சி இறுதிக்கட்டத்தை எட்டும் வரையில் மாதம் ஒருமுறை தொடரும். இடையில் கர்ப்பமாக இருக்கும் காலங்களில் மட்டுமே தடைபடும்.

மாதவிடாய் நாட்களில் பெண்கள் அனுபவிக்கும் வலிகள் (Menstrual Pain) ஏராளம். வயிறு பகுதியில் ஏற்படும் கடுமையான வலியை, ஒவ்வொரு பெண்ணும் மாதா-மாதம் கடந்துதான் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அவர்களை மாதவிடாய் நாட்களிலும் ஓய்வில்லாத உழைப்பை நோக்கி நகர்த்திவிட்டது.

பல மேலை (Western Coutries) நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும், முதன்மை பட்டியலில் உள்ள இந்திய நிறுவனங்களும் (Top Indian Companies) மாதவிடாய் நாட்களில் தனது பெண் பணியாளர்களுக்கு சமீபத்தில் சம்பளத்துடன் (Periods Leave for Girls) கூடிய விடுப்பையும் அறிவித்து இருந்தது. இன்று மாதவிடாய் நாட்களில் இயற்கையாக குறையும் சில வலிகள் குறித்து காணலாம்.

கீழ்காணும் வழிமுறைகள் என்பது அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது. ஏனெனில் அவர்களின் தனிப்பட்ட உடல் அமைப்பு, வாழ்க்கை முறைகள், உணவு பழக்கவழக்கத்தை பொறுத்து மாதவிடாய் சுழற்சி வேறுபடும். சிலருக்கு லேசான சௌரிய உணர்வை ஏற்படுத்தலாம். மாதவிடாய் வலியை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம். Rahul Preet Singh Glam Pic: "கொஞ்சம் கவர்ச்சி காட்டுவோம்" - அம்மு பாப்பாவாக நடித்து, ஆசையை தூண்டும் நடிகை.. கவர்ச்சி கிளிக்ஸ் இதோ.! 

மஞ்சள் (Turmeric): மருத்துவ குணம் கொண்ட மஞ்சள், உடலில் இருக்கும் வீக்கம், மாதவிடாய் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும்.

ஓட்ஸ் (Oats): நார்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் சத்துக்களை கொண்ட ஓட்ஸ், இரத்த நாளங்களை தளர்த்தும். மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். மூளையில் இருக்கும் செரோடோனின் வேதிப்பொருளை குறைத்து, மாதவிடாய் வலியை குறைக்கும்.

Periods Pad Napkin (Photo Credit :Pixabay)

இஞ்சி (Ginger): இந்திய சமயலறையில் முக்கியமாக இடம்பெறும் இஞ்சி, இயற்கை அலர்ஜி எதிர்ப்பு பண்பை கொண்டது ஆகும். இது மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தசை வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். புத்துணர்ச்சியாக உணரவைக்கும்.

சீமை சாமந்தி / கெமோமில் தேநீர் (Chamomile Tea): மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வழியில் இருந்து விடுபட, சீமை சாமந்தி தேநீர் நல்ல பலனை தரும். இது நோயெதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு பண்பு கொண்டது ஆகும். நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். காய்ச்சல், தசைப்பிடிப்பு, மாதவிடாய் கோளாறு, காயங்கள், தூக்கமின்மை, குடல் கோளாறு, வாத பிரச்சனை, மூலம் சார்ந்த நோய்களும் குணமாகும். Rahul Preet Singh Glam Pic: "கொஞ்சம் கவர்ச்சி காட்டுவோம்" - அம்மு பாப்பாவாக நடித்து, ஆசையை தூண்டும் நடிகை.. கவர்ச்சி கிளிக்ஸ் இதோ.! 

வைட்டமின் சி (Vitamin C Foods): வைட்டமின் சி உள்ள உனவுகளை மாதவிடாய் நாட்களில் எடுத்துக்கொள்வதால், மாதவிடாய் வலி குறையும். மாதவிடாய் சுழற்சியின்போது 3-5 நாட்கள் இரத்தப்போக்கு இருக்கும் என்பதால், வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சையை சாறாக்கி குடிக்கலாம். இதில் தசை பிடிப்பை கட்டுப்படுத்தும் நார்சத்து உள்ளது. அதேபோல, ஆரஞ்சு பழமும் சாப்பிடலாம்.

ஊறவைத்த குங்குமப்பூ & திராட்சை (Soaked Saffron & Raisins): இரவு நேரத்தில் நீரில் திராட்சை மற்றும் குங்குமப்பூவை ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்நீரை குடித்து, திராட்சை - குங்குமப்பூவை சாப்பிடுவது மாதவிடாய் வலியை குறையும், மனமாற்றத்திற்கு வழிவகை செய்யும்.

தண்ணீர் (Water): உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு நீரே சிறந்த மருந்து. நமது உடலின் நீரை தக்கவைப்பது, பல்வேறு பிரச்சனைகள் சரியாக உதவி செய்யும். பெரிய கிளாசில் உள்ள நீரை குடிப்பது மாதவிடாய் வலியை குறைக்க உதவும். நீரை குடிக்க சலிப்பாக இருந்தால், நீர் உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவைகளை சாப்பிடல. இளம் சூடுள்ள நீரை குடிப்பது வலியில் இருந்து விடுதலை தரும்.

சாலமன் மீன்கள் (Salman Fishes): குளிர்ந்த நீர்களில் மட்டுமே காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட சாலமன் மீன்கள், மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது ஆகும்.

மாதவிடாய் நாட்களில் டின்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகள், துரித உணவுகள், காபி, காரசமான உணவுகள், நொறுக்குதீனிகள், கொழுப்புகள் நிறைந்த அல்லது எண்ணெயில் பொறித்த உணவுகள், சாக்லேட்டுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை நமது உடலின் தன்மையை சாதாரண நாட்களிலேயே நெஞ்சு எரிச்சல், செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தவல்லவை. இவற்றை மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டோம் என்றால், அது சார்ந்த பிரச்சனையை இவை கட்டாயம் அதிகரித்து மேலும் வழிகளை ஏற்படுத்தும்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் நாட்களில், மாதவிடாய் வலியை கட்டுப்படுத்த கால்சியம் நிறைந்த உணவுகளை உணவில் ஏற்க வேண்டும். பீன்ஸ், பாதாம், கீரை வகை உணவுகள், நெல்லிக்கனி, பிளாக்பெரி போன்றவற்றை சாப்பிடலாம். சாதாரண நாட்களை விட கூடுதலாக கவனம் எடுத்து நீர் குடிக்க வேண்டும்.

குறிப்பு: மேற்கூறிய வழிமுறைகள் என்பது அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது. ஏனெனில் அவர்களின் தனிப்பட்ட உடல் அமைப்பு, வாழ்க்கை முறைகள், உணவு பழக்கவழக்கத்தை பொறுத்து மாதவிடாய் சுழற்சி வேறுபடும். ஆகையால், சந்தேகம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது, அதற்கேற்ப செயல்படுவது நல்லது.