Lightning Strikes Liberty Statue: அம்மாடியோவ்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்; அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையில் தாக்கிய மின்னல்.!

விடுதலை தேவியின் அக்னி சுடரை ஏற்றி வைப்பதுபோல மின்னல் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

Lightning Attack on Liberty Statue (Photo Credit: @TheInsidePaper X)

ஏப்ரல் 06, நியூயார்க் (New York): அமெரிக்கா போன்ற நாடுகளை பொறுத்தமட்டில் அங்கு சூறாவளி, புயல், மின்னல் தாக்குதல் போன்றவை இயல்பானது ஆகும். மழைக்காலங்களில் கடுமையான மின்னல் தாக்குதலை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் மின்னல் வானுயர அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களையும் தாக்கும். அவற்றில் மின்னல் பாதுகாப்பு திறன் இருப்பதால், கட்டிடங்களுக்கு ஒன்றும் ஆகத்து.

அக்னி சுடரை ஏற்றிவைப்பது (The Statue Of Liberty Hits by Lightning) போல தாக்கிய மின்னல்: இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருக்கும் லிபர்ட்டி சிலையை மீது மின்னல் தாக்கியது. கடுமையான மின்னல் ஒளிகள் சீறிப்பாய்ந்து வந்து விடுதலை தேவியின் வெற்றிக்கான அக்னி சுடரை ஏற்றிவைப்பது போல செயல்பட்டது. இந்த காட்சிகளை அங்குள்ள மக்கள் படம்பிடித்து வைத்துள்ளனர். தற்போது இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Indian Student in US Died: இந்திய மாணவி அமெரிக்காவில் மரணம்; தொடரும் சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.! 

லிபற்றி சிலை பற்றி சிறுகுறிப்பு: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் துறைமுகத்தீவில், சுதந்திர தேவியின் (State of Liberty) பிரம்மாண்ட சிலை உள்ளது. கடந்த அக்.18, 1886ம் ஆண்டு சிலை நிறுவப்பட்டது. அமெரிக்கா - பிரான்ஸ் நாட்டின் நட்புறவு மற்றும் விடுதலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து லிபர்டி சிலை வழங்கப்பட்டது. போரின் சரித்திர வெற்றியை குறிக்கும் வகையில் ஒருகையில் புத்தகம், மற்றொரு கையில் தீப்பந்தம் ஆகியவை சுதந்திர தேவி கொண்டுள்ளார். அவரின் தலையில் இருக்கும் கிரீடம் போன்ற அமைப்பு 7 கண்டங்கள் மற்றும் 7 கடல்களை குறிக்கிறது.

மின்னல் தாக்கிய புகைப்படம்: