Walking in pebble stones: அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் தான்.! கூழாங்கற்களில் இப்படி நடந்தால் போதும்.! ஆரோக்கியம் உங்கள் வசம்.!

இதனால் உடல் மற்றும் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்.

Pebble Stone/Foot (Photo Credit: Wikipedia/Twitter)

அக்டோபர் 05 (Health Tips): நடை பயிற்சிதான் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் அது பயிற்சியாக இல்லாமல் அவர்களின் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கூழாங்கற்கள் இயற்கையின் ஒரு மென்மையான அதிசயம். தினமும் காலணிகள் இல்லாமல் பாதங்கள் கூழாங்கற்களில் படும்படி நடப்பது மிகவும் நல்லது. வலது புறமாக 10 நிமிடம், இடது புறமாக 10 நிமிடம் என தொடர்ந்து நடைபயிற்சி செய்தால், நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இந்த எட்டு வடிவ வர்ம நடைபயிற்சி வாத நோய்களுக்கு சிறந்த தீர்வாகும். கூழாங்கற்கள் பொருத்தப்பட்ட நடைபாதையில் நடக்கும் போது, முதுமையினால் ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம் ஓரளவுக்கு குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் கூழாங்கற்களில் இந்த எட்டு வடிவ நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, இடுப்பு வலி, குதிகால் வலி, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது.