Morning Lazy: அச்சச்சோ.. காலையில் எழுந்ததும் சோர்வாக இருப்பது ஏன்??.. பதறவைக்கும் தகவல்.. மக்களே நிம்மதியாக உறங்குங்கள்..!
அதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் யோசனை செய்தது உண்டா?.
டிசம்பர், 11: தினமும் காலையில் நாம் எழுந்திருக்க வைக்கும் அலாரம் தலைமாட்டில் ஒலித்துகொண்டு இருந்தாலும், அதனை ஆப் செய்துவிட்டு 2 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை உறங்கிக்கொண்டு இருப்போம் (Morning Lazy). நாம் காலை நேரத்தில் சோர்வுடன் இருப்பதால் அவ்வாறு செய்தோம். ஒருசில நேரம் இரவில் விரைவில் உறங்கினாலும், காலையில் இவ்வாறான சோர்வுகள் இயல்பானது ஆகும். அதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் யோசனை செய்தது உண்டா?.
நாம் உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டாலும் மூளை உறக்க நிலையில் இருந்து எழாமல் இருக்கும் என்பதால், அதன் கடமைகளை தொடங்க சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். ஒருவர் உறங்கி எழுந்ததும் 10 - 15 நிமிடங்கள் முதல் ஒருமணிநேரம் வரையில் சோர்வு என்பது நீடித்து இருக்கும். இவை எழுந்ததில் இருந்து தொடர்ந்து அன்றாட வேலையை பாதிக்கும் வண்ணம் இருந்தால், அதற்கு சில காரணங்கள் இருக்கும். இவற்றை கண்டறியவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
உறக்கமின்மை, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடீரென விழிப்பது, உறக்க சுழற்சியை மாற்றுவது போன்ற பல காரணிகள் இவ்வாறான சோர்வுக்கு வழிவகை செய்கின்றன. இன்றளவில் செல்போன், கம்பியூட்டர், லேப்டாப் என்று பல பொருட்களை அன்றாடம் உபயோகித்து வருகிறோம். அதன் திரைகளில் இருந்து வெளியேறும் நீலகதிர்கள் நம்மை பாதித்து உறக்கம் - விழிப்பை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோனை சீர்கெட வைக்கிறது. இதனால் காலையில் எழுந்ததும் உடல் சோர்வை சந்திக்கிறது. TamilnaduCricketers: இந்திய அணியில் இடம்பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிறந்த வீரர்கள் யார்?.. அவரை மறக்க முடியுமா?.!
நாளொன்றுக்கு அதிகமான காபி, சாக்லேட் உட்பட காபின் பொருட்களை எடுத்துக்கொள்வது உறக்கத்தை பாதிக்கும். காபின் மூலக்கூறுகள் விழிப்புடன் வைக்க உதவி செய்யும். இதனால் நள்ளிரவு நேரங்களில் விழிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல, மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் தூக்கத்தின் அளவு வெகுவாக குறையும். போதையில் நீங்கள் உறங்கினாலும், எழுந்ததும் உங்களின் உடல் எதிர்ப்பு திறனுடன் செயல்பட தொடங்கும்.
இவை காலையில் விழிப்பு ஏற்பட்டதும் சோர்வை உணர வைக்கும். இரவில் உறங்கும்போது அடிக்கடி சிறுநீரை கழிக்க தூண்டும். நாம் சரியாக உறங்கவில்லை என்றாலும், உறங்கும் இடம் சரியில்லை என்றாலும் சோர்வு இருக்கும். உறங்கும் நேரத்தில் தேவையற்ற சத்தம் காதுகளின் வழியே மூளையை சென்றடையும் என்பதாலும் உறக்கம் பாதிக்கும். இதனால் அடிக்கடி விழிப்பு ஏற்படும். சூடான / குளிரான இடத்திலும் உறங்குதல் கூடாது.