'Ghostbuster' of Telangana: பள்ளியில் பேய் இருக்கிறதா? பதறும் மாணவர்கள்.. ஆசிரியர் செய்த திகில் செயல்..!

தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் பேய்கள் நடமாடுவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் கூறி வருகின்றனர்.

Ghostbuster (Photo Credit: @sudhakarudumula X)

ஜூலை 10, அடிலாபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தின் ஜெய்நாத் மண்டலத்தில் உள்ள ஆனந்தூரில் பரிசத் என்ற மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பேய்கள் நடமாடுவதாக அங்குள்ள மாணவர்கள் நம்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு ரவீந்தர் என்ற புதிய ஆசிரியர் பணிக்கு சேர்ந்துள்ளார். அவர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு மரம் விழுந்து உள்ளது. அதனைப் பார்த்த மாணவர்கள் அனைவரும் அலற ஆரம்பித்துள்ளனர். அது மட்டும் இன்றி இது பேயின் செயல் தான் என்று ரவீந்திரிடம் கூறியுள்ளனர்.

பேய் இருக்கிறதா?: ரவீந்தர் அவர்களிடம் பேய் என்பது இல்லை என்று எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் அப்பள்ளியில் படிக்கும் 87 மாணவர்களும் அதனை நம்ப மறுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு சில மாணவர்கள் இப்பள்ளியில் பேய் இருப்பதினால் வேறொரு பள்ளிக்கு மாறி உள்ளனராம். இதனைக் கேட்ட ரவிந்தன் பள்ளியில் இரவு தனியாக தான் இருப்பதாகவும் இதன் மூலம் பேய் இல்லை என்று நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார். Best Wireless Earbuds: சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்.. கண்டிப்பா இதை பார்த்துட்டு வாங்க போங்க.!!

ஆசிரியர் செயல்: அதன்படி அங்குள்ள மாணவர்கள் அவரை அமாவாசை தினத்தன்று பள்ளியில் இருக்கக் கூறியுள்ளனர். அவரும் மாணவர்களின் பேச்சை கேட்டு அங்கிருந்த அறையில் இரவு எட்டு மணி முதல் காலை 6 மணி வரை இருந்துள்ளார். அவரை காண்பதற்காக காலையில் அனைத்து மாணவர்களும் அங்கு வந்துள்ளனர். அவர் நலமுடன் இருப்பதனை கண்டு பேய் இங்கு இல்லை என்பதனை உணர்ந்துள்ளனர். ஆசிரியரின் இந்த சிறப்பான செயலுக்கு பெற்றோர் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.