Watch Groom Loses Balance: விழா மேடையில் உற்றார்-உறவினர்கள் முன் அசிங்கப்பட்ட மாப்பிள்ளை; மணப்பெண்ணை தூக்க முயற்சித்து கலகலப்பு..!
மணப்பெண் சிறிது விளையாட்டுத்தமாக தூக்குவதற்கு இடையூறாக செயல்பட, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற எண்ணத்தில் மணப்பெண்ணை தூக்க நினைத்த மாப்பிள்ளைக்கு பல்பு பரிசாக கிடைத்த தருணத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஆகஸ்ட் 04, ட்ரெண்டிங் வீடியோ (Trending Video): திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பது சான்றோர் வாக்கு. அன்றைய காலங்களில் திருமணம் என்றால் ஊரே விழாக்கோலத்தில் இருக்கும். ஊரெங்கும் அலங்கரிக்கும் தோரணங்கள், மேளதாளங்கள் முழங்க, உற்றார்-உறவினர், வழிப்போக்கர் என பலரும் திருமண நொடிகளை வாழ்த்திவிட்டு செல்வார்கள்.
இன்றளவில் திருமணங்கள் ஆடம்பரத்தின் அங்கமாகிவிட்டது. சில விளம்பரமில்லா திருமணமும் நடக்கத்தான் செய்கின்றன. அன்றாடம் உணவுக்கு அல்லோல்படும் குடும்பத்தில் இருந்து, செல்வந்தர்கள் குடும்பம் வரை என திருமணம் என்ற விஷயத்தை எடுத்துவிட்டால், அதனை நான்கு பேர் பார்த்து பாராட்டும் அளவு வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.
இதில் மாப்பிள்ளை, மணப்பெண், இருதரப்பு குடும்பம், நண்பர்கள் என அனைவரும் செய்யும் அட்ராசிட்டி கொண்டாட்டங்கள் சில இடங்களில் அடிதடியிலும் முடிவுற்றுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டால் கொண்டாட்டங்களுக்கு என்ன தடையா? விதிப்பது என கேள்வி எழலாம். அவரவரின் சுய விருப்பப்படி நடக்கும் நிகவுகளுக்கு அவரவர் மட்டுமே பொறுப்பாகலாம். Mexico Crash: 6 இந்தியர்களுடன் 131 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து; பேருந்தில் பயணித்த 18 பேர் பரிதாப பலி..!
திருமணத்தின் போது நண்பர்கள் குழு செய்யும் அட்ராசிட்டியை காட்டிலும், சில இடங்களில் எதிர்பாராத விதமாக மணமக்கள் தங்களின் விளையாட்டு செய்கையால் சில சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடும். அந்த வகையில், வடமாநிலத்தில் நடந்தததாக தெரியவரும் திருமணத்தில், மணப்பெண்ணை மணமகன் தூக்க முயற்சிக்கிறார்.
அப்போது, மணப்பெண் சிறிது விளையாட்டுத்தமாக தூக்குவதற்கு இடையூறாக செயல்பட, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற எண்ணத்தில் மணப்பெண்ணை தூக்க நினைத்தார். அச்சமயம் எதிர்பாராத விதமாக விழா மேடையில் இருவரும் சரிந்தனர். இதனைக்கண்ட பலரும் நகைப்புற்றனர்.