Viral Video: 12 ஆண்டு பழமையான காருக்கு இறுதிச்சடங்கு.. தொழிலதிபர் செய்த வினோத சம்பவம்..!
குஜராத்தில் தொழிலதிபர் ஒருவர் தான் 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த காரை அடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 09, அம்ரேலி (Gujarat News): குஜராத் மாநிலம், அம்ரேலி (Amreli) மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் போலாரா என்பவருக்கு ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இவர், சூரத் நகரில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். பல வருடங்களாக ஒரு காரை பயன்படுத்தி வந்தார். இந்த காரில் அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், காரை விற்று விடலாம் என பலர் கூறியுள்ளனர். அந்த கார் வாங்கிய பிறகு தான், சஞ்சய் போலாராவுக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டு ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளார். Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!
இதனையடுத்து, காரை விற்க மனமில்லாமல் அடக்கம் செய்வது என முடிவெடுத்தார். இந்நிலையில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் (நவம்பர் 07) நடந்தது. இதனையொட்டி, கார் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதில், ஆன்மீக பிரமுகர்கள் உட்பட சுமார் 1500 பேர் கலந்துகொண்டனர். அதன் பிறகு, இறுதி சடங்குகள் செய்த பின்னர் தனது விவசாய நிலத்தில் காரை புதைத்தார். காருக்கு இறுதி சடங்கு செய்யும் நிகழ்வுகள் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பழமையான காரை அடக்கம் செய்த தொழிலதிபர்: