Cockroach From Man's Lungs: மனிதனின் நுரையீரலில் கரப்பான் பூச்சி.. வெற்றிகரமாக நீக்கிய மருத்துவர்கள்..!

கேரளாவில் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நுரையீரலில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cockroach From Man's Lungs (Photo Credit: Pixabay)

மார்ச் 1, கொச்சி (Cochin): கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவருக்கு கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பிராணவாயு செலுத்துவதற்காக டியூப் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் உடல்நலம் சரியான அவர் வீடு திரும்பினார்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்தபோது, எவ்வித சிக்கலும் இருப்பதாக மருத்துவர்களுக்கு தெரியவரவில்லை. இருப்பினும் அவருக்கு மூச்சுத்திணறல் இருந்து வந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சையின் போது, அவரது நுரையீரலுக்குள் சுமார் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சி ஒன்று சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. Rinki Cheema Passed Away: பிரபல மிஸ் இந்தியா ரிங்கி சக்மா மரணம்... ரசிகர்கள் சோகம்..!

இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கரப்பான் பூச்சி அகற்றினர். தற்போது அந்த நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிராண வாயு செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த டியூபின் வழியே இந்த கரப்பான் பூச்சி அவரது நுரையீரலுக்குள் நுழைந்து இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தற்போது இச்சம்பவமானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.