Abucted Man Reunition After 22 Years: 22 ஆண்டுகளுக்கு பின்பு தாயுடன் சேர்ந்த சேய்.. உத்திரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!
உத்திர பிரதேசத்தில் ஏழு வயதில் தொலைந்த மகன் 22 ஆண்டுகளுக்கு பின்பு தாயுடன் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 29, சஹாரன்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் அமித் குமார். இவரின் தாயும் தந்தையும் இவரின் சிறு வயதிலேயே பிரிந்து விட்டனர். இந்நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு அமித் குமார் தன்னுடைய 7 வயதில் ஒரு கடைக்கு செல்லும் பொழுது கடத்தி செல்லப்பட்டுள்ளார். கடத்தி செல்லப்பட்டவர் மும்பையில் கைவிடப்பட்டுள்ளார். அங்கு இருப்பவர்கள் அவரைப் பார்த்து இவர் வட இந்தியராக இருக்கும் என்று நினைத்து டெல்லி ரயிலில் ஏற்றி விட்டுள்ளனர். டெல்லியில் யாருமில்லாமல் தனியே அமித் சுற்றியுள்ளார். Boy Killed By Strangulation Near Karaikal: தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி.. தட்டிக்கேட்டதற்காக காரைக்கால் அருகே கழுத்தறுத்து சிறுவன் கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
அவரைப் பார்த்து காவல்துறையினர் அவரை ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அங்கு கழித்த அவர் பணிக்காக வெளியே வந்துள்ளார். அப்போது எதார்த்தமாக ஒரு காவல்துறையினரை பார்த்த அவர் தான் தொலைந்த அடையாளங்களை கூறியுள்ளார். அந்தக் காவல்துறையினரின் மூலமாக 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அமைக்குமா தன்னுடைய தாயுடன் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியான சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.