Brain Surgery: எஸ்பிபி பாட்டு கேட்டபடி 'மூளை அறுவை சிகிச்சை': பாட்டியின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல்..!
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தவாறே வயதான பெண்ணுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 09, விஜயநகரம் (Andhra Pradesh News): ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயநகரம் மாவட்டம் ராஜாமில் உள்ள ஜிஎம்ஆர் கேர் மருத்துவமனையில் மருத்துவர்கள் 65 வயது மூதாட்டிக்கு, மயக்க மருந்து இல்லாமல் மூளை அறுவை சிகிச்சையை (Surgery) வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். அதாவது பக்கவாதத்தின் அறிகுறிகளுடன் 65 வயது மூதாட்டியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் ரத்தக்கசிவு இருப்பதை கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.
ஆனால், அவரது வயது முதிர்வினால், மயக்க மருந்தை அவர்க்கு வழங்குவது மிகவும் ஆபத்தானது. எனவே மூதாட்டி, பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடல்களைக் (SP Balasubrahmanyam’s Song) கேட்கும் போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மூதாட்டியின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்படுகிறது. RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
குறிப்பு: அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் போது நோயாளிகள் இசையைக் கேட்பது நல்ல பலனைத் தரும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. அறுவை சிகிச்சையின் போதும், முடிந்த பின்னரும் இசையைக்கேட்கும் நோயாளிகள் வலியை குறைவாக உணர்வதாகவும் வேகமாக குணம் அடைவதாகவும் தெரியவருகிறது. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை வரும் நோயாளிகள் தமக்கு பிடித்த பாடல்களின் பட்டியலை கொண்டுவருவதை, மருத்துவமனைகள் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.
எஸ்பிபி பாட்டு கேட்டுக் கொண்டே மூளை அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பாட்டி: