Korattur Accident: சிக்னலை மதிக்காத சென்னை மாநகர பேருந்து ஓட்டுனரால் சோகம்; தலைநசுங்கி இளம்பெண் உயிரிழப்பு.!
சாலையை கடக்க தயாரான பெண்மணி, மாநகர அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் தலைநசுங்கி உயிரிழந்த சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜனவரி 24, கொரட்டூர் (Chennai News): சென்னையில் உள்ள கொரட்டூர், பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்த பெண்மணி வித்யா. திருமணமான வித்யா, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கொரட்டூர் நோக்கி பயணம் செய்ய, தனது சாலையை சிக்னலில் கடக்க சாலையில் தயாராக இருந்துள்ளார்.
பேருந்து ஓட்டுனரின் அலட்சியம்: அவ்வழியே வரும் வாகனங்கள் நிற்க சிகப்பு சமிக்கை கணிப்பிக்கப்பட்டதும், வித்யா சாலையை கடந்துள்ளார். அச்சமயம், சென்னை மாநகர அரசு பேருந்து அதிவேகத்தில் வந்த நிலையில், சிக்னலை மீறிச்செல்ல முயற்சித்து வித்யாவின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் வித்யா நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். Thoothukudi Shocker: கோழி மேய்ந்த தகராறால் வந்த வினை; பயங்கர சண்டையில் முதியவர் வெட்டிக்கொலை.!
தலை நசுங்கி பலியான சோகம்: இதனால் வித்யா தலைநசுங்கி நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் வருவதற்குள், ஓட்டுனரின் அலட்சியத்தால் நடந்த விபத்தை கண்டு துடித்துப்போன மக்கள், பேருந்து ஓட்டுனரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
ஓட்டுனரை மீட்டு கைது செய்த காவலர்கள்: அதிகாரிகள் வந்து மக்களின் பிடியில் இருந்து ஓட்டுனரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டுனரை கைதும் செய்தனர். அங்கிருந்த பொதுமக்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பியதை தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.