Aged Man Kills: கொடுத்த கடனை திருப்பி கேட்ட 58 வயது முதியவர் கொடூர கொலை: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!
அவசரத்திற்காக கடன் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வாங்கியவர், மீண்டும் அந்த கடனைக் கேட்ட முதியவரை கொலை செய்த பயங்கரம் டெல்லியில் நடந்துள்ளது.
பிப்ரவரி 11, புதுடெல்லி (Delhi Crime News): புதுடெல்லியில் உள்ள தயால்பூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது முதியவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட முதியவரான ஜஹிருதயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
10 ஆயிரம் கடன் வாங்கியவர்: முதற்கட்ட விசாரணையில் சாகித் என்பவரால் முதியவர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர். பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஷாகித், அவசரத்தேவைக்காக முதியவரிடம் ரூபாய் 10 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்.
கொலையில் முடிந்த வாதம்: இதனை பலமுறை திருப்பி கேட்டும், மாதங்கள் கடந்தும் பணம் வந்தபாடில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நடந்த வாய் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த நபர், முதியவரை குத்திக் கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
தனிப்படை அமைப்பு: இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சாகித்தை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.